சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sept 2015

செப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற தினம்

கிரிக்கெட் ஆரம்பத்தில் நாள் கணக்கில் ஆடும் டெஸ்ட் போட்டிகளாகவும், பின்னர் அதில் முடிவு கிடைப்பதில்லை  என்பதால் ஒருநாள் போட்டிகளாகவும், அதும் 60 ஓவர் போட்டிகள் என்ற வடிவிலும், பின்னர் 50 ஓவர் என்ற வடிவிலும்  இருந்தது. இந்நிலையில் தான் டி20 எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதில்  எந்த அணிக்கும் அவ்வளவாக அனுபவம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.அப்போதுதான் முதல் உலகக்  கோப்பையை தென்னாப்பிரிக்காவில் நடத்தியது ஐசிசி.


இதில கலந்து கொண்ட அனைத்து அணிகளுமே கத்துக்குட்டி அணி தான். அதிலும் இந்தியாவின் நிலைதான் பரிதாபம்  பயிற்சியாளர் இல்லாத உலக்கோப்பை தொடர், அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சச்சின், டிராவிட், கங்குலி டி20  வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற முடிவால் அணிக்கு கேப்டனாக தோனி எனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அறிமுகம் செய்யப்பட்டார். அணியின் அதிகபட்ச அனுபவம் என்பது சேவக், யுவராஜையே நம்பி இருந்தது.

லீக் ஆட்டத்தில் ஹாலந்துடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஒருவேளை அடுத்த ஆட்டத்தில்  பாகிஸ்தானிடம் தோற்றால் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணிக்கு காத்திருந்தது பாகிஸ்தான்  ஆட்டம். எதிர்பாராத விதமாக ஆட்டம் டை ஆக பவுல்டு அவுட் முறையில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. பின்னர்  சூப்பர் 6 போட்டியில் நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை சந்தித்த இந்தியா, வழக்கம் போல் ராசியே  இல்லாத தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிலும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் வந்தது. இதற்கிடையில் யுவராஜின் 6 பந்துகளில் 6 சிக்சர் மாயம், கம்பீர்-சேவாக்கின் 135 ரன் பாட்னர்ஷிப் என  சாதனைகளை குவித்தது இந்தியா.


இறுதி போட்டியில் சந்தித்தது தனது பரம வைரியான பாகிஸ்தானைதான்! இந்த போட்டியில் வென்றால் முதல்  உலககோப்பை நமக்குதான் என்ற வெறியில் இரண்டு அணிகளும் போட்டி போட்டன. டாஸ் வென்ற இந்தியா  பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது சேவக் காயம் காரணமாக விளையாடாத்தால் யூசுப் பதானுக்கு அது அறிமுகப்போட்டியாக  அமைந்தது. முதல் போட்டியை சிக்சருடன் துவக்கிய யூசுப் பதான், சிறிது நேரத்தில் ஆட்டமிழக்க கம்பீர் மட்டும் ஒரு  முனையில் நிலைத்து ஆட, மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 5  விக்கெட்களை இழந்து 157 ரன்கள் குவித்தது.


அடுத்து ஆடவந்த பாகிஸ்தானுக்கு இது எளிய இலக்கு என்றாலும் சரியான துவக்கமில்லாததும், முன்னனி வீரர்கள்  ஆட்டமிழந்ததும் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. அதோடு இந்திய வீரர்களின் பந்து வீச்சு துல்லியமாக  இருந்தது. ஆனால் மிஸ்பா-உல்-ஹக்கின ஆட்டத்தால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 13  ரன்கள் தேவை ஒரு விக்கெட் தான் உள்ளது என்ற நிலை இந்தியாவின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனிடம்  பந்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிதாக ஜோஹிந்தர் ஷர்மாவிடம் பந்தை அளித்தார் தோனி.
முதல்  பந்தில் வைடு, அந்த பந்தில் ரன் இல்லை என்ற சூழல், இரண்டாம் பந்தில் சிக்சர் ஒருவேளை தோனி தவறான முடிவை  எடுத்துவிட்டாரோ என்ற நிலை, மூன்றாவது பந்தை மிஸ்பா விலகி அடிக்க முயற்சித்து ஷார்ட் ஃபைன் லெக்கில் இருந்த  ஸ்ரீஷாந்திடம் செல்ல லாவகமான கேட்ச் இந்தியாவை வெற்றி பெற வைத்தது. புதிய பந்துவீச்சாளரை  அறிமுகப்படுத்தியது உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்றே பந்துகளில் இந்த முடிவு சிறந்த முடிவாக மாறியது.  அதேசமயத்தில் தவறான ஷாட்டால் உலககோப்பையை தவறவிட்டதும் தவறான முடிவுகளில் ஒன்றாக பதிவானது.

எந்த அனுபவமும் இல்லாத இந்தியா கிரிக்கெட் அணி ,முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற தினம்  இன்று செப்டம்பர் 24. 

No comments:

Post a Comment