சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sep 2015

பிரிக்ஸ் நாடுகளில் வலிமையானது இந்தியா: மோடி பெருமிதம்!

பிரிக்ஸ் அமைப்பில் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்டமாக நேற்று அயர்லாந்து தலைநகர் டப்ளின் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் அயர்லாந்துக்குச் சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். பின்னர், அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை மோடி சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, தலைநகர் டப்ளினில், அயர்லாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.


அயர்லாந்தில் பள்ளிக் குழந்தைகள் சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கூறி மோடியை வரவேற்றனர். அப்போது மோடி பேசும்போது, ''அயர்லாந்து குழந்தைகள் சம்ஸ்கிருதப் பாடல்களையும், ஸ்லோகங்களையும் கூறியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோன்ற நிகழ்வு இந்தியாவில் நடைபெற்றிருந்தால், மதச்சார்பின்மை என்ற பெயரில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கும். இந்தியாவும், அயர்லாந்தும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த ஆண்டில் 100வது சுதந்திர தினத்தை அயர்லாந்து கொண்டாட உள்ளது. இந்த சிறப்பு மிக்க கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கும். ஒரு காலத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவுக்குப் பதிலாக இந்தோனேசியாவைக் கொண்டு வரும் நிலை இருந்தது. தற்போது பிரிக்ஸ் நாடுகளிலேயே வலிமையானது எதுவென்று கேட்டால், அது இந்தியாவாகத்தான் இருக்கும்" என்றார்.

அதன்பின் டப்ளினில், அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்தும், ஐரோப்பா-ஆசியா ஆகிய கண்டங்களில் இதுதொடர்பான நிலவரம் பற்றியும் என்டா கென்னியுடன் ஆலோசனை நடத்தினேன்.

முக்கியமாக, இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகவும், அணு எரிபொருள்கள் வழங்கும் நாடுகளின் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இந்தியா இடம்பெறவும் அயர்லாந்து ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்" என்றார்


No comments:

Post a Comment