சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

கிராண்ட் ஸ்லாம் விசித்திரம் : வென்றார்...சென்றார்!

இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு  ஓய்வு அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை 33 வயது நிரம்பிய  பென்னட்டா சகநாட்டு வீராங்கனை ராபர்ட்டா வின்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 7-6 (7-4), 6- 2 என்ற செட் கணக்கில் பென்னட்டா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பென்னட்டாவுக்கு கிடைத்தது.  பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுதான். 

இந்த போட்டி முடிந்த கையோடு டென்னிசில் இருந்து விடை பெறுவதாகவும் அறிவித்து பென்னட்டா ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், ''எனது ஒரே கனவு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதுதான். அது நிறைவேறி விட்டது. இந்த மகிழ்ச்சியாக தருணத்துடன் டென்னிசில் இருந்து விடை பெறுகிறேன்'' என்றார். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்தில்  இத்தாலியை சேர்ந்த வீராங்கனைகள் மோதியது இதுதான் முதல்முறை. பெனட்டாவுடன் மோதிய ராபர்ட்டா வின்சிக்கு 32 வயதாகிறது. அந்த வகையில் அதிக வயது கொண்ட வீராங்கனைகள் மோதிய இறுதி ஆட்டமாகவும் இது அமைந்தது. 


No comments:

Post a Comment