சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..

மெரிக்க ஆட்டோமொபைல் உலகத்துக்கும், ஐரோப்பிய ஆட்டோமொபைல் உலகத்துக்கும் எப்போதுமே ஆகாது. ஆனால், CR&S நிறுவனத்தின் DUU பைக் போல, அவ்வப்போது ஏதாவது ஆச்சரியம் நிகழ்ந்தால்தான் உண்டு. ஆம், அமெரிக்க இன்ஜினுடன் இத்தாலிய இன்ஜினியரிங் இணைந்து உருவாக்கிய பைக்தான் DUU. பைக்குகளில் இந்த காம்பினேஷன் இதற்கு முன் அமைந்ததே இல்லை. இப்போது இந்த பைக்தான் நேக்கட் பைக்குகளின் கடவுளாகப் போற்றப்படுகிறது.
 அமெரிக்க பைக்குகளின் இன்ஜின்கள், அவற்றின் டார்க் திறனுக்குப் பெயர் பெற்றவை. ஐரோப்பிய பைக்குகள் டிசைனுக்கும் பொறியியலுக்கும் புகழ் பெற்றவை. இந்த இரண்டையும் இணைக்க நினைத்த இத்தாலியில் உள்ள CR&S நிறுவனத்தின் ராபர்டோ க்ரிபால்டி, இத்தாலியின் டிரேட்மார்க் ரோலிங் சேஸியை எடுத்துக்கொண்டு, 1916 சிசி சக்தி கொண்ட அமெரிக்க வி-ட்வின் இன்ஜினுடன் இணைத்தார். விளைவு, DUU  - உலகிலேயே படு வித்தியாசமான நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக். இதன் கியர்பாக்ஸ் ஆர்டருக்கு ஏற்ப தயார் செய்யப்படுகிறது. இதன் டார்க் சக்தி மட்டும் 15.09 kgm .

பைக்கின் சேஸி, முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால்  ஆனது. முன் பக்கம் தலைகீழாக வைக்கப்பட்ட 48 மிமீ டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன். பின் பக்கம், ஹைட்ராலிக் ப்ரொக்ரெஸிவ் ஷாக் அப்ஸார்பர் பொருத்தப்பட்டுள்ளது. மொத்த பைக்கும் மேட் - டு - ஆர்டர்தான். வாடிக்கையாளர் கேட்பதற்கு ஏற்ப பைக் வடிவமைக்கப்படும். இத்தாலியில் உள்ள மிலனில் தயாரான இந்த பைக், பார்க்க ஒரு கோணத்தில் 'கஃபே ரேஸர் பைக்’ போலவும், மற்றொரு கோணத்தில் ஒரு 'கஸ்டம் சூப்பர் பைக்’ போலவும் இருப்பது தனிச் சிறப்பு. CR&S  என்ற பெயரின் முழு விளக்கமே கஃபே ரேஸர் அண்டு சூப்பர் பைக்தான்.
DUU-வின் மொத்த எடை 245 கிலோ. இத்தனை எடையும் மிக நுணுக்கமாக பேலன்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில்தான் இத்தாலியின் பொறியியல் கை கொடுத்திருக்கிறது. பாடியில் உள்ள சில பாகங்கள் ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இன்ஜின் எளிதாகக் குளிரவும், ஓட்டுபவர் வசதியாக உணரவும் இது வழி செய்கிறது. இவ்வளவு எடையையும் தாங்கி நிற்க, நல்ல பிரேக்ஸ் வேண்டுமே? முன் பக்கம் 320 மிமீ வேவ் டபுள் ஃப்ளோட்டிங் டிஸ்க் மற்றும் 4 பிஸ்டன் பிரேக் காலிப்பர்கள், பின் பக்கம் 2 பிஸ்டன்கள் கொண்ட 260 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்ஸ் உள்ளன. சாதாரண சாலையாக இருந்தாலும் சரி, மலைப் பாதையாக இருந்தாலும் சரி, ஓட்டுபவருக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது DUU.
இந்த பைக்கை வாங்க ஆசையா? டீலருக்கெல்லாம் அலைய வேண்டியது இல்லை. பைக்கைத் தயாரித்த CR&S நிறுவனத்தின் வலைப் பக்கத்திலேயே ஆர்டர் செய்யலாம். விலை அமெரிக்காவில் 15.4 லட்சம்!



No comments:

Post a Comment