பிகளின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இசையமைத்ததற்காக தனக்கு வழங்கப்பட்ட 'ஃபத்வா’வுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரானிய சினிமா இயக்குநரான மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வெளிவந்துள்ள திரைப்படம் ‘முஹம்மதாகிய இறைத்தூதர். '(Muhammad: Messenger of God) இறைவனின் நேரடித் தூதராகப் போற்றப்படும் முஹம்மது நபியின் (ஸல்) வாழ்க்கை வரலாற்றை இந்த படம் சித்தரிக்கிறது.
இஸ்லாமிய மதத்தின் எந்தக் கோட்பாட்டையும் மீறாமல் திரையில் கொண்டு வரவேண்டுமென்று இயக்குனர் மஜிதி முழுகவனம் செலுத்தி வந்தார். முகமது நபியின் முகத்தைக் காணொளிக் காட்சியாகவோ, வரைபொருளாகவோ சித்திரிக்கக் கூடாதென்பது, இஸ்லாமியக் கோட்பாடுகளுள் முக்கியமானது. இதனால் முகமது நபியின் பார்வையிலேயே கதை நகருவதாக படத்தில் காட்டப்பட்டது.
இந்த திரைப்படத்தை எதிர்த்து பல இஸ்லாமிய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸா அகாடமி படத்தை இயக்கிய மஜித் மஜிதி, இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சையீத் நூரி கூறுகையில் ''இந்த திரைப்படத்தின் பெயரை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். இந்த படத்தை பார்த்து விட்டு பிடிக்காதவர்கள் எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்தால் அது முகமது நபியின் புகழுக்குக் களங்கம் கற்பிப்பது போல அமைந்து விடும். புனிதமானவர்களின் பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் அதற்காக சம்பளம் வாங்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் நிஜ வாழ்வில் எத்தகைய நெறிகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் முகமது நபி போன்ற சான்றோர்களின் பாத்திரத்தில் நடிக்க வைத்ததை இஸ்லாமியர்களால் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இதனால், இந்த படத்தை எடுத்த மஜிதிக்கும், ஏ.ஆர். ர,ஹ்மான் ஆகியோருக்கு ஃபத்வா கொடுக்கிறோம்'' என்றார்.
இந்நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், ''ஈரானிய படம் மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை தான் வலியுறுத்தியுள்ளது. மனிதநேயத்தை வலியுறுத்தி, அவநம்பிக்கைகளை களையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் தான் ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தேன்'' எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment