கோதாவரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை துச்சமாக மதித்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி இருக்கிறார் ஒரு வீர காவலர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கும்ப மேளா விழா நடப்பது வழக்கம். அதன்படி தற்போது அங்கு கும்ப மேளா விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கும்ப மேளாவின் 2வது அரச புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, சாதுக்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடினர்.
அப்போது, கோதாவரி ஆற்றுக்கு மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்று ஆற்றிற்குள் குதித்துள்ளார். அந்த நேரத்தில், ஆற்றுக்குள் குதித்தவரின் அருகில், பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த ஒரு காவலர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், சற்றும் யோசிக்காமல் தன் உயிரை துச்சமென மதித்து, ஆற்றிற்குள் குதித்து அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார்.
காவலரின் இந்த வீரச்செயல், தற்போது புகைப்படமாகவும், வீடியோவமாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த காட்சிகளை கண்ட அனைவரும் அந்த காவலரின் வீரச்செயலை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
காவலரின் இந்த வீரச்செயல், தற்போது புகைப்படமாகவும், வீடியோவமாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த காட்சிகளை கண்ட அனைவரும் அந்த காவலரின் வீரச்செயலை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment