சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Sept 2015

நான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே உள்ளது: நடிகை குஷ்பு

நான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே உள்ளது என்று பெரியார் பிறந்தநாள் விழாவில் நடிகை குஷ்பு பேசினார்.

பெரியார் பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தொடங்கி வைத்தார்.


இந்த கருத்தரங்கில் குஷ்பு பேசும்போது, ''நான் 29 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னைக்கு வந்தேன். கடந்துவிட்ட 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும்போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும்போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்தநாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.


பகுத்தறிவு என்றால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோது யாரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஆனாலும், மதம், சாதி, இனம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை. கடவுள் இருக்கிறாரா? என்று எனக்கு தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார்? பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். எனக்கு 6வது அறிவை கடவுள் தரவில்லை. எனது பெற்றோர் தந்தனர். அவர்களை நான் கடவுளாக நினைக்கிறேன்.

படிப்பு இல்லாதவர்களிடம் தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று வீரமணி இங்கே சொன்னார். நானும் படிக்காதவள் தான். அதனால் தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது. இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்கு பயந்து துணிச்சலை வெளிகாட்டுவது இல்லை.பெரியாருக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து, வளர்ந்தாலும், என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளது. நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது.

பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுப்பட்டார் பெரியார். அதனால், பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்" என்றார்.



No comments:

Post a Comment