கிரானைட் என்றால் என்ன என்று தெரியாத குடிசை வீடுகளில் கூட கிரானைட் ஊழல் பற்றிய விவாதமும், மலையை சிலையாக்கி சிறு கப்பலில் அனுப்பிய நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு, மலை போல சொத்துக்கள் குவித்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்பதைப் பற்றியும் மக்கள் சந்தேகத்துடன் விவாதித்து வருகின்றனர்.
தனி நிறுவனம் அரசை ஏமாற்றி, பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்படுத்தும் வகையில் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்தும், உள்ளூரில் விவசாயத் தொழிலை அழித்தும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான விசாரணை சகாயம் குழுவின் மூலம் நடைபெற்று வரும் நிலையில் அரசை ஏமாற்றியது தனி நிறுவனமா இல்லை, அரசு அதிகாரிகளா என மக்கள் கேள்வி கேட்கும் நிலை உள்ளது.
உலகில் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், நேர்மையை கோடிக்கணக்கில் கொடுத்தாலும் வாங்க முடியாது என சகாயம் ஐ.ஏ.எஸ். நிரூபித்து விட்டார்.
ஒரு தனியார் நிறுவனம் எதாவது ஒரு துறையில் அரசை ஏமாற்றும் என்ற வரலாற்றை பொய்யாக்கும் விதத்தில் கனிம வளத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தொல்லியல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை என அனைத்து துறைகளையும் ஏமாற்றி அதிகாரிகளை விலை பேசி கிரானைட் கற்களை பல ஆயிரம் கோடிக்கு விற்ற சரித்திர சாதனை தமிழகத்திற்கு உண்டு.
பொதுவாகவே மக்கள் தான் போலீசிடம் புகார் தருவார்கள். ஆனால், போலீசாரே வரிசையில் நின்று அதிகார வர்க்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்களது இடத்தை மீட்டுத் தர சகாயம் குழுவிடம் மனு கொடுத்திருக்கின்றனர். இது அந்த தனியார் நிறுவனத்தின் 'வீரத்தை' உலகிற்கு சொல்லியது.
குவாரி அதிபர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட கனிம வளங்களோடு, புராதன சின்னங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்படுத்தும் கண்மாய்களும், பாசன வாய்க்கால்களும் குவாரிக்காக பல ஆயிரம் அடி ஆழத்திற்கு குழி தோண்டி அழிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனி நிறுவனம், அரசு அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் பல ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடிகள் ஏமாற்றி சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பி.ஆர்.பி. நிறுவனம் கற்களை ஏற்றுமதி செய்து பல முறை தேசிய அளவில் விருதுகள் வாங்கியுள்ளது. கண்மாயில் விவசாயத்திற்கு மாட்டு வண்டியில் கரம்பை மண்ணை அள்ளும் ஏழை விவசாயியை விரட்டிப்பிடித்து, மாட்டு வண்டியை காவல் நிலையத்தில் நிறுத்தி, வீரத்தை நிலை நாட்டும் வருவாய், கனிம வளத்துறை அதிகாரிகள் எங்கே போனார்கள்?
அனுமதிக்கப்பட்ட அளவை விட அத்துமீறி பார்த்த இடமெல்லாம் பள்ளம் தோண்டி கற்களை வெட்டி எடுக்கும் வரை வெளிநாட்டில் வேலை பார்த்தார்களா? விதியை மீறி குவாரி நடத்திய பலருக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்தும், இதுவரை வசூலிக்க முடியாத அரசு அதிகாரிகள், அவர்களது குவாரியை நடத்த அனுமதிப்பதேன்? அரசு போட்ட அபராதத்தை விட, குவாரிகள் ஏற்றுமதி செய்த கற்களின் விலை பல ஆயிரம் கோடிகள் என்ற போது அபராம் விதிப்பதால் என்ன பயன்?
பி.ஆர்.பி. நிறுவனம் அனுமன் போல மலையை தூக்கிக் கொண்டு செல்லவில்லை. பல நூறு அதிகாரிகளின் 'கவனிப்பிற்கு' பிறகு தானே ஏற்றுமதி செய்துள்ளனர். நீர் நிரம்ப வேண்டிய கண்மாய்களில் கழிவு கற்களை நிரப்பி கொட்டிய தனியார் நிறுவனம் ஒரே நாளில் இதை செய்திருக்க முடியாது. விவசாயிகளை விரட்ட, நீரை கடத்தும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த குவாரிகள் ஒரே நாளில் அதை செய்திருக்க முடியாது.
தனியார் கிரானைட் குவாரி அரசின் அனுமதி பெற்று வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கும், ஏற்றுமதி செய்யப்பட கற்களின் அளவுக்கும் உள்ள வித்தியாசம் கூட கண்டுபிடிக்கத் தெரியாத இவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகளா? ஏற்றமதி செய்யப்பட கற்களுக்கும், கழிவு போக உற்பத்தி செய்யப்படும் கற்களுக்கும் இடையிலான வித்தியாசம் கூட தெரியாமல் லஞ்சப் பணத்தை பெறுவதில் மட்டுமே அரசு அதிகாரிகள் இருந்ததால் தான் மலையை சிலையாக்கி கடத்தி விட்டார்கள்.

நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது…
வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் கொடுத்து அரசியல்வாதிகள் பின்புலம், அரசு அதிகாரிகளின் சொத்துக் குவிப்பை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
குவாரி செயல்பட்ட காலம் முதல் 2012 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காவல் உயர் அதிகாரிகள், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கனிம வளத்துறை அதிகாரிகள், பொதுபணித்துறை அதிகாரிகளின் பட்டியலும் தற்போதைய, சொத்துப் பட்டியலையும் சி.பி.ஐ. மூலம் விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும்.
குவாரிகளை அரசே நடத்தி கற்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் ஏற்றுமதி செய்வதற்கு முன் குவாரி அனுமதி, கற்களின் உற்பத்தியை தனி அமைப்பு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். கைப்பற்றப்பட்ட கற்களின் மதிப்பே பல ஆயிரம் கோடிகள் என்றால், இதுவரை ஏற்றுமதி செய்த கற்களின் மதிப்பு இந்திய அரசுக்கே பட்ஜெட் போடும் அளவிற்கு இருக்கக்கூடும்.
இந்த குவாரி ஊழலில் பி.ஆர்.பி. நிறுவனம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது போலச் சொன்னாலும், அணைத்து குவாரிகளும், கிரானைட் ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்களும், விதி மீறி செயல்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
பல ஆயிரம் கோடி ஊழலில் சிறை சென்றது குவாரி அதிபர்கள் மட்டும் தான். பெயரளவிற்கு அப்பாவி வி.ஏ.ஓ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்த ஊழலில் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் சம்பந்தப்படாமல் நேர்மையாக இருந்தது போலவும், இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

கிரானைட் முறைகேடு பற்றி பேசும் நாம், கிரானைட் கொள்ளையோடு போட்டி போடும் கார்னெட் மணல் கொள்ளை பற்றி யாரும் பேசாதது மக்களை சந்தேகம் அடைய செய்துள்ளது. சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி கார்னெட் மணல் ஊழலை வெளிக்கொண்டு வர வேண்டும். பல லட்சம் கோடிகள் மதிப்பிலான கார்னெட் மணல் கொள்ளை ராஜாக்களுக்கு மட்டுமே சொந்தமாக இல்லாமல், அவற்றையும் அரசு நேரடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இன்றைக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ள முறைகேடுகள் இத்தோடு முடியட்டும். நீதிமன்றம் இனியாவது விழித்துக்கொண்டு தமிழக சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படாமல் இருக்க, நல்ல தொழில் நுட்ப அறிவு கொண்ட, சிறப்பு அதிகாரம் கொண்ட குழுவை அமைத்து தமிழகத்தின் கனிம வளத்தின் மதிப்பை கணக்கிட்டு டாஸ்மாக் சரக்கை ஒழித்து தமிழகம் செழிக்கவும், வேலை வாய்ப்பில் முன்னிலை வகிக்கவும் செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
இனி வரும் காலங்களில் மீண்டும் ஒரு சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி கிடைப்பாரா எனச் சொல்ல முடியாது. ஆனால், கொள்ளை அடிக்கும் குவாரி அதிபர்கள் கூட்டம் அதிகமாகவே தோன்றுவார்கள். எனவே, நீதிமன்றம் அரசின் கனிம வளக் கொள்கையில் மாற்றம் கொண்டு வராத வரை கொள்ளைகள் தொடரும் என்பதே உறுதி.

No comments:
Post a Comment