சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Sept 2015

கணவரை பிரிந்தது ஏன்? தொகுப்பாளினி ரம்யா விளக்கம்!

திருமணமான ஒரே ஆண்டில் தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா, கணவரை பிரிந்துவிட்டார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி வர்ணனையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ரம்யா, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
 

இதனிடையே, ரம்யாவும், அவருடைய கணவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து ரம்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், தனது கணவரைப் பிரிந்துவிட்டதாகவும், வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "எனது திருமண பந்தம் முறிந்தது. இது இருவரும் இணைந்தே எடுத்த முடிவு. இந்த அறிவிப்பின் மூலம் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். திருமண பந்த முறிவு எனது தனிப்பட்ட பிரச்னை.

மேலும், அது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எனவே, எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்னையை இத்தோடு விட்டுவிடுங்கள். இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

'ஓகே கண்மணி' படத்தில் நடித்துள்ள ரம்யா, மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும், இது கணவர் அப்ரஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment