உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குதிரையையும் காலில் விழவைத்துவிட்டார் ஜெயலலிதா என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று போடி மீனாட்சிபுரத்தில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முதலில் பேசிய கட்சியின் மகளிர் அணி தலைவர் பிரேமலதா, “ இங்கு மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு இலவசமாக மாட்டு வண்டிகளை வழங்குகிறோம். அதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் வேளாண் மைக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆற்று மணலை கடத்த தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அத்தகைய நிலைக்குதான் இன்றைய ஆண்ட, ஆளும் கட்சிகள் உங்களை தள்ளியுள்ளன.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான 'யூ.பி.எஸ்'... அதாங்க ஓ.பி.எஸ்ஸின் (ஜெயலலிதா எப்போதெல்லாம் ஜெயிலுக்கு போகிறாரோ அப்போதெல்லாம் பன்னீர் முதல்வராகிறார் என்பதால் இவ்வாறு குறிப்பிட்டாராம்.) தம்பி ராஜா தமிழகம் முழுக்க மணல் கடத்தலை நடத்துகிறார்.
தேனியில் இருக்கும் ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் முதல்வர்களின் தொகுதி. அங்கிருந்து நெசவாளர்கள் பஞ்சம் பிழைக்க, வெளியூர் சென்றவர்கள் இன்னமும் திரும்பி வந்தபாடில்லை. இன்றுவரை காமராஜர் கட்டிய அணையையும், பென்னிகுக் கட்டிய முல்லை பெரியாறு அணையையும் சொல்லி சண்டையிட்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளும் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை அணைகளை கட்டியுள்ளன என தெரியவில்லை.
இன்று சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதலில்
வரவேற்றது தே.மு.தி.க தான். தமிழகத்தில் 30 நாட்களுக்குள் தொழில் துவங்க
அனுமதி கிடைக்குமென சொல்கிறார்கள். ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் 60
நாட்களுக்குள் தான் கையெழுத்தே ஆகும். இங்கு தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும்
முட்டாள்களா? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலக முதலீட்டார்கள் மாநாட்டில் 3டி தொழில்
நுட்பத்தில் ஒரு குறும்படம் திரையிடப்பட்டுள்ளது. அதில் ஒரு குதிரை பறந்து
வந்து ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்குவதுபோல இருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு சைக்கோலாஜிக்களாக ஒரு பார்வை இருக்கிறது. அனைவரும் காலில்
விழுந்து வணங்குவது அவருக்கு சந்தோஷமாக இருக்கிறது. கடைசியில் குதிரையையும்
காலில் விழவைத்துவிட்டார்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காய்கறிகளை கொண்டுச்செல்ல தடை விதிக்கிறார்கள். அதே நேரத்தில், கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியில் கொட்டுகிறார்கள். அதை யாரும் கண்டிக்க மறுக்கிறார்கள் “ என முடித்தார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று போடி மீனாட்சிபுரத்தில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முதலில் பேசிய கட்சியின் மகளிர் அணி தலைவர் பிரேமலதா, “ இங்கு மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு இலவசமாக மாட்டு வண்டிகளை வழங்குகிறோம். அதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் வேளாண் மைக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆற்று மணலை கடத்த தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அத்தகைய நிலைக்குதான் இன்றைய ஆண்ட, ஆளும் கட்சிகள் உங்களை தள்ளியுள்ளன.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான 'யூ.பி.எஸ்'... அதாங்க ஓ.பி.எஸ்ஸின் (ஜெயலலிதா எப்போதெல்லாம் ஜெயிலுக்கு போகிறாரோ அப்போதெல்லாம் பன்னீர் முதல்வராகிறார் என்பதால் இவ்வாறு குறிப்பிட்டாராம்.) தம்பி ராஜா தமிழகம் முழுக்க மணல் கடத்தலை நடத்துகிறார்.
தேனியில் இருக்கும் ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் முதல்வர்களின் தொகுதி. அங்கிருந்து நெசவாளர்கள் பஞ்சம் பிழைக்க, வெளியூர் சென்றவர்கள் இன்னமும் திரும்பி வந்தபாடில்லை. இன்றுவரை காமராஜர் கட்டிய அணையையும், பென்னிகுக் கட்டிய முல்லை பெரியாறு அணையையும் சொல்லி சண்டையிட்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளும் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை அணைகளை கட்டியுள்ளன என தெரியவில்லை.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காய்கறிகளை கொண்டுச்செல்ல தடை விதிக்கிறார்கள். அதே நேரத்தில், கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியில் கொட்டுகிறார்கள். அதை யாரும் கண்டிக்க மறுக்கிறார்கள் “ என முடித்தார்.
No comments:
Post a Comment