சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sep 2015

'கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்': நாஞ்சில் சம்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேனர்!

கட்சிப் பொதுக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், தனது கட்சிப்பொறுப்பை கண்டபடி பிரசுரித்ததால் அதிர்ச்சியடைந்தார் அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத். 

நாகர்கோவிலில், அதிமுகவின் நான்காண்டு சாதனைப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். 


கட்சியின் முக்கிய பிரமுகரை வரவேற்கும் விதமாக,  சம்பத்திற்கு நகர் எங்கிலும் பேனர் அமைத்திருந்தனர் அதிமுகவினர். 

இந்த பேனர்களில் நாஞ்சில் சம்பத்தின் கட்சிப்பொறுப்பான கொள்கை பரப்பு துணை செயலாளர் என்பதற்கு பதிலாக,  'கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்' என்ற எழுத்து பிழையோடு இருந்தது. கூட்டத்திற்கு வந்த நாஞ்சில் சம்பத் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் பேசிவிட்டு சென்றார் என்கிறார்கள் கட்சியினர். 'கஷ்டப்பட்டு பொறுப்பு வாங்கினா, கட்சிக்காரங்க இப்படியா பண்ணுவாங்க..?' என்று புலம்பியபடி சென்றாராம் சம்பத்!
ஆனாலும் இதில் ஏதாவது உள்நோக்கம் உள்ளதா என பேனர் வைத்தவர்கள் பற்றி தனக்கு நெருக்கமான நாகர்கோவில் பிரமுகரிடம் நாஞ்சில் சம்பத் விசாரித்தார் என்கிறார்கள்.No comments:

Post a Comment