சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sept 2015

பிஎஃப் கணக்கு தொகையை செல்போன் மூலம் அறியலாம்!

பி.எஃப். கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை, இனிமேல் செல்போன் மூலம் அறிந்து கொள்ளலாம் என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி முதலாவது முதன்மை மண்டல ஆணையர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ''தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, அனைத்து சந்தாரர்களுக்கும் யுனிவர்சல் (UAN) அக்கவுன்ட் நம்பரை வழங்கி வருகிறது. இந்த எண் வழங்குதல் மற்றும் செயலாக்குதல் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


அதேபோல், அனைத்து தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களும் தங்களது வருங்கால வைப்பு நிதி சந்தாக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், மாதம் ரூ.1லட்சத்திற்கும் குறைவாக சந்தா தொகை செலுத்தும் தொழிலதிபர்கள் மட்டும் வரும் டிசம்பர் 2015 வரை காசோலை மற்றும் வரையோலை மூலமாக செலுத்தலாம்.

யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) பெற்றுள்ள சந்தாதாரர்கள், இணையதளத்தில்  தங்களுடைய பி.எஃப் கணக்கின் பாஸ் புக், யு.ஏ.எண் கார்டு போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், தங்களது கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்தி மாத சந்தா உள்ளிட்ட விவரங்களை செல்போன் மூலம் தெரிவிந்து கொள்ளலாம்.

அதேபோல், பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் விண்ணப்பத்தில் இனி ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப ஒட்ட தேவையில்லை. இந்த முறை தற்போது மின்னணு பணவரிவர்த்தனை மூலம் செட்டில் செய்யப்படும் படிவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

யுஏஎண் என்ற எண்ணை செயலாக்கம் செய்வதற்காக தாம்பரம் பி.எஃப் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2226 2251 என்ற தொலைபேசி மூலமும், ro.tambaram@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment