சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sept 2015

கூகுளின் புதிய லோகோவில் என்ன இருக்கு?

தேடியந்திர நிறுவனமான கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ...

1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின்,  ஆறாவது லோகோ.


2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம்.

3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் இரண்டின் கலைவையே இதற்கு காரணம்.

4. கூகுளின் பழைய லோகோவில் பாருங்கள். இ எனும் எழுத்து சற்று சாய்வாக இருக்கும். புதிய லோகோவிலும் இ எழுத்து சாய்ந்தே இருக்கும். கூகுளின் எதையும் வித்தியாசமாக செய்யும் கலாச்சாரத்தின் அடையாளம் இது.

5.புதிய லோகோ மட்டும் அல்ல, புதிய எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் புதிய சேவைகளை அறிவிக்க இந்த எழுத்துரு பயன்படுத்தப்படும். லோகோ மற்றும் சேவை அறிவிப்புகளுக்கு இடையிலான தனித்தன்மை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

6. இதற்கு முன்னர் செல்போன்களில் குறைந்த வேக இணைப்பு எனில் அதற்கேற்ற கூகுள் லோகோ இடம்பெறும். இனி எல்லா இணைப்புகளிலும் ஒரே லோகோ தான்.

7.பழைய லோகோவின் எடை தெரியுமா? 14,000 பைட்கள். புதிய லோகோ மிகவும் இலேசானது. 305 பைட் தான் இதன் எடை.

8. புதிய லோகோவில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களின் துடிப்பான தன்மை லோகோவின் முழுமைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.

9. கூகுள் மேற்கொண்டுள்ள லோகோ மாற்றங்களில் இதுதான் மிகவும் பெரியது. இதற்கு முந்தைய மாற்றங்கள் சிறிய அளவிலானவையே.

10. லோகோவின் சுருக்கமான வடிவத்தை குறிக்கும் ஆங்கில எழுத்தான சிறிய ஜிக்கு பதிலாக பெரிய ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களும் இருக்கும்.



கூகுள் லோகோ வரலாற்றை அறிய:

https://web.archive.org/web/19990224043535/http://www.google.com/stickers.html





No comments:

Post a Comment