சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sep 2015

என்ன காரியம் செய்திருக்கிறது வாட்ஸ்-அப் ?

குளிச்சியா ? என்றால் ஒரு ஸ்மைலி. பாஸ் ஆவியா ? என்றால் ஒரு ஸ்மைலி. உயிரோட இருக்கியா? என்றால் ஒரு ஸ்மைலி என அனைத்துக்  கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்-அப் ஸ்மைலியில், சமூக அமைதியை பாதிக்கக் கூடிய வகையிலான அப்டேட் இன்று நிகழ்ந்துள்ளது.

இப்படி ஒரு ஸ்மைலி இருந்திருந்தால் நல்லா இருக்குமே என நமக்குத் தோன்ற தோன்ற 'வாட்ஸ்-அப்' பும், ஃபேஸ்புக்கும் நமக்கு பல வெரைட்டியான ஸ்மைலிகளை அள்ளித் தந்துள்ளது.
 

ஆனால் இன்று வாட்ஸ்-அப் செய்துள்ள புதிய அப்டேட்டில், 'இனவெறி' யைத் தூண்டும் வகையில் ஸ்மைலிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இதில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் யூத் பயன்பாட்டில் அதிகம் உள்ளவை.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், ஒவ்வொரு மனித முகமும் வெள்ளை, மாநிறம் , கருப்பு என பல்வேறு கலர்களில் வந்துள்ளது. இதேதான் கையில் காட்டும் செய்கைகளுக்கும்.
இந்த ஸ்கின் டோன் அப்டேஷன் தேவை தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த அப்டேட்,  இளைஞர்கள் மத்தியில் இனவாதத்தை  (RACISM) தூண்டி விடக் கூடும் என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது. 

நாம் அனைவரும், பண்பாட்டு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறிச் செல்கிறோம் என நினைக்கும் தருணத்தில், வாட்ஸ்-அப் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. No comments:

Post a Comment