சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Sept 2015

பிளாஸ்டிக்கை ஏன் தவிர்க்க வேண்டும்? பிளாஸ்டிக் தவிர்க்க... மாற்று வழிகள்...

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் இப்போது என்ன ஆகிவிடப்போகிறது, பின்னாட்களில், பிரச்னை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ எனும் அசட்டுத் தைரியத்தில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், நோய்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்கும்.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, கிண்ணத்தில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) என்ற ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் எய்துதல், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 92 சதவிகிதத்தினருக்கு அவர்கள் ரத்தத்தில் பி.பி.ஏ ரசாயனம் இருந்ததாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centre for disease control and prevention) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல, பச்சிளம் குழந்தைகள்கூட இதனால், பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

பிளாஸ்டிக் தவிர்க்க... மாற்று வழிகள்...
பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தினாலும், இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும் போது, பிரஷ்ஷில் இருந்து அதிகமான ரசாயனங்கள் வெளியாகும்.
சோப் பாக்ஸ், குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட், மக் போன்றவற்றை அலுமினியமாகவோ, ஸ்டீலாகவோ மாற்றலாம். இது துருப்பிடிக்காது. நீண்ட நாட்களுக்குப் பயன்படும்.
தண்ணீர் குடிக்க, பித்தளை, ஸ்டீல் பாட்டிலைப் பயன்படுத்தலாம். மதிய உணவை எடுத்துச் செல்வதற்கு பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் நல்லது.
தட்டு, டம்ளர், கிண்ணம் போன்றவற்றை ஸ்டீல் அல்லது பித்தளையில் வாங்கிப் பயன்படுத்தலாம். பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.
குழந்தைகளுக்கு பேபி பாட்டிலோ, பிளாஸ்டிக் அல்லது ரப்பர் நிப்பிலோ கொடுப்பதை தவிருங்கள். குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது என்கின்றன ஆய்வுகள். உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றை ஸ்பூன், பாலாடை, ஸ்டீல் கிண்ணம், ஸ்டீல் டம்ளரில் கொடுக்கலாம்.
மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படுவது உயர்தரமான பிளாஸ்டிக் என்றாலும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
ஹோட்டலில் உணவு வாங்க, வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டல் உரிமையாளரை வாழை இலையில்் பேக் செய்து தரச் சொல்லிக் கேட்கலாம். வாழை இலை இரண்டு முதல் 10 நாட்களில் மக்கிவிடும்.
இளநீர், பழச்சாறு குடிக்கும்போது ஸ்ட்ரா தவிர்க்கலாம்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கும்போது மோசமான கெமிக்கல்களை வெளியிடும். மண் பாண்டங்கள், எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறுங்கள்.
கடைக்குச் செல்கையில், துணிப்பைகளை வைத்திருங்கள்.

மூன்று ஆர் (R) - களை (Reduce, Reuse, Recycle) எப்போதும் கடைப்பிடிப்போம். அதாவது, பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்போம். தேவை எனில், ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம்.
இதைப் பின்பற்றினால் நம் உடலும், நாம் வாழும் பூமியும் ஆரோக்கியமாக இருக்கும்!

No comments:

Post a Comment