சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Sept 2015

ரியல்மாட்ரிட் அறிவிப்பு : ரொனால்டோவின் விலை ரூ.7 ஆயிரத்து 445 கோடி !

போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பணக்கார கால்பந்து அணியான ரியல்மாட்ரிட்டுக்காக  விளையாடி வருகிறார்.
கால்பந்து உலகில் அசத்தி வரும் காரத் பேல், ஜேம்ஸ் ரோட்ரிகஸ், மோட்ரிச் உள்ளிட்ட இளம் வீரர்களும் ரியல்மாட்ரிட் அணியில்தான் உள்ளனர்.முன்களத்தில் இந்த இளம் வீரர்களுடன் ரியல்மாட்ரிட் அணி அசத்துகிறது. 


ரொனால்டோவை தவிர்த்து விட்டு பார்த்தாலும் முன்களத்தில் ரியல்மாட்ரிட் அணி சோடை போகவில்லை. செர்ஜியோ ரமோஸ் தலைமையில் ரியல்மாட்ரிட் அணி வலுவாகவே உள்ளது.

இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விற்கும் முடிவுக்கு ரியல்மாட்ரிட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மையின் அணியில் ரொனால்டோ இணையப் போவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.  

பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணி ரொனால்டோவை வாங்க நினைத்தால், டிரான்பர் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு ஒரு பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில்  ரூ.7 ஆயிரத்து 445 கோடி)  செலுத்த வேண்டுமென்று ரியல்மாட்ரிட் தெரிவித்துள்ளது. 

கத்தார் நாட்டை சேர்ந்த தொழிலதிபரான நாசல் அல் கெலாபி, பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியை வாங்கி அதில்  பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார். அண்மையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ஏஞ்சல் டி மரியாவை பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணி வாங்கியது.
ஏற்கனவே ஸ்வீடன் கேப்டன் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச், பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா ஆகியோர் இந்த அணிக்காகத்தான் விளையாடி வருகின்றனர். இதில் தியாகோ சில்வா கேப்டனாகவும் ஸ்லாட்டன் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். 

ஆனால் இவர்களையெல்லாம் விட அணியின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு கவர்ச்சிகரமான வீரர் தேவை என்பதை பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணி கருத்தில் கொண்டுள்ளது. பணத்தை வைத்துக் கொண்டு உலகின் அதிக விலையுடைய கால்பந்து வீரரை வாங்க துடித்துக் கொண்டிருக்கிறது. 

ரியல்மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இவ்வளவு தொகையை கொடுக்க பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணி முன்வந்தாலும் ரியல்மாட்ரிட் அணி ரொனால்டோவை விற்குமா? என்பதும் கேள்விக்குறிதான். 

No comments:

Post a Comment