சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Sept 2015

செப்டம்பர் 27ல் ஒரு அதிசய நிகழ்வு!

ரும் 27 ஆம் தேதி வானில் தோன்றப் போவது சாதாரண நிலா அல்ல; சூப்பர் மூன்! அது என்ன சூப்பர் மூன் என்று கேட்கிறீர்களா?
பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் நிலவு, சில சமயங்களில் பூமியை விட்டுத் தொலைவாகவும், (apogee) சில சமயங்களில் பூமிக்கு மிக அருகிலும் (perigree) வரும். சூப்பர் மூன் நிகழ்வின்போது, அதன் அப்போஜீ தொலைவுடன் ஒப்பிடுகையில்,  பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப் போகிறது . எனவே, வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் தெரியுமாம்.

வருடத்திற்கு நான்கைந்து முறை சூப்பர் மூன் தோன்றும் என்றாலும், இந்த முறை வருவது கொஞ்சம் ஸ்பெஷல். ஏனென்றால் அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.
நிலவிற்குத் தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது என்றும், சூரிய ஒளியைத்தான் அது பிரதிபலிக்கும் என்பதும் பாடப்புத்தகத்திலேயே நாம் படித்ததுதான். பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். அதனால்தான் அன்று தோன்றுவது 'ரத்த நிலா' (blood moon) என்று வருணிக்கிறார்கள். சூரிய கிரகணத்தைக் காணும்போது  அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை.
                                             
சூப்பர் மூன், சந்திர கிரகணம் அன்றே தோன்றும் அதிசய நிகழ்வு. 1910 லிருந்து இதுவரை ஐந்து முறைதான் நிகழ்ந்துள்ளது. 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் தோன்ற உள்ளது. இனி அடுத்த சூப்பர் மூன் சந்திர கிரகணம், 2033ல் தான் நிகழும். ஆனால் ஒரு வருத்தமான விஷயம். இந்த நிகழ்வு நம்மூரில் தெரியாதாம். வட ,தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஐரோப்பிய ஆப்ரிக்க நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியுமாம்.
என்ன செய்வது... நாம் 2033 வரை காத்திருக்க வேண்டியதுதான்!



No comments:

Post a Comment