சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Feb 2015

நல்ல சம்பளம்... ஆடம்பரம்... தீட்ஷை... நிஷாவின் அவதாரம்

நியூயார்கில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு, ஒரு வருடம் இத்தாலியில் டிசைனிங் கோர்ஸ், மேன்ஹேட்டனில் ஃபேஷன் மெர்சன்டைஸிங் கோர்ஸ், மீண்டும் நியூயார்க்கில் கைகொள்ளாத சம்பளத்துடன் வேலை என்று அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வந்தவர், மும்பையைச் சேர்ந்த நிஷா. தற்போது ஜெயின் சமூக கோட்பாடுகளில் ஐக்கியமாகி தீட்ஷை எடுத்துக் கொண்டிருக்கிறார். முகம் மட்டுமே தெரியும்படியான வெள்ளை ஆடையுடன் நிஷா தீட்ஷை எடுத்துக் கொண்டபோது, அவருடைய குடும்பம் ‘நிஷா... மிஸ் யூ!’ என்று விவரிக்க முடியாத மனநிலையுடன் நின்றிருந்தது.


நிஷாவின் தந்தை மனோஜ், ‘‘27 வயசாகுற நிஷா, ரொம்ப துறுதுறுனு, எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருப்பா.ஃபேஷன் டிசைனர் என்பதால், அவளோட டிரெஸ், ஹேண்ட் பேக், ஜூவல்ஸ் எல்லாம் அவ்ளோ அழகா தேர்வு செய்து போட்டுக்குவா. நியூயார்க்ல ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனியில பல லட்சம் சம்பளம் வாங்கிட்டு இருந்தா. பிடிச்ச வேலையை ரசிச்சு செய்திட்டிருந்த பொண்ணு, திடீர்னு வந்து தீட்சை வாங்கிக்கிறதா சொன்னப்போ, நாங்க அதிர்ந்துட்டோம். எங்களுக்கு அதில் விருப்பம் இல்ல. ஆனாலும், அவ தன் முடிவில் உறுதியா இருந்ததால, அவ போக்கில் விட்டுட்டோம்...’’ ஒரு அப்பாவின் தவிப்பை தாங்கி நிற்கிறார் மனோஜ்.

தீட்ஷை வாங்கிய பிறகு பேசிய நிஷா, ‘‘நியூயார்கில் நல்ல சம்பளம், ஆடம்பரம் எல்லாமே எனக்குக் கிடைச்சது. நாளெல்லாம் வேலையில் மூழ்கி விட்டு வீடு திரும்பியதும், எனக்குள் ஒரு வெறுமை வந்து குடியமர்ந்து கொள்ளும். தனிமை வெறுமை என்றால், மற்றவர்களிடம்தான் இருக்கிறதா என் மகிழ்ச்சி? என் சந்தோஷத்திற்கு நான் பிறரை சார்ந்திருக்க வேண்டுமா? உண்மையில் சந்தோஷம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? இப்படி பல கேள்விகள் என்னுள். அந்தச் சமயத்தில்தான் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிலரை நான் சந்திக்க நேர்ந்தது. அன்றிலிருந்து நான் உண்மையான சந்தோஷத்தை, வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த தொடர் தேடலின் முடிவுதான், இந்த தீட்சை. இன்று என் காலில் செருப்பில்லை, ஆடம்பரமான உடை உடுத்தவில்லை. ஆனால் நான் பேரானந்தமாக இருக்கிறேன்!” -தெளிந்த கண்களில் சிறு புன்னகை கூட்டிச் சொல்கிறார், நிஷா! 




No comments:

Post a Comment