சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Feb 2015

பாரம்பரியம் Vs பார்லர் - 2 பொல்லாத பொடுகு... போக்கும் வழி என்ன?

பாரம்பரியம் மற்றும் பார்லர் என இரண்டு விதங்களிலும் அழகைப் பராமரிக்கும் வகையில், தலை முதல் பாதம் வரையிலான அத்தனை அழகு விஷயங்களையும் ஆராய்ந்து தீர்வு தரும் பகுதி இது!
பார்லர்!

பொடுகுக்கான தீர்வு பற்றி பேசுகிறார்... 'க்ரீன் டிரெண்ட்ஸ்' கற்பகம்.
''தலையாய பிரச்னை... முடி கொட்டுறதுதான். இதுக்கு நிறைய காரணம் இருந்தாலும், முக்கிய காரணம்... பொடுகுத் தொல்லை. தலையை ரெகுலரா சுத்தப்படுத்தாம இருக்கறது, மனஅழுத்தம், அடிக்கடி ஸ்ட்ராங்கான ஷாம்பு யூஸ் பண்ணி தலைக்கு குளிக்கறது, தலை ரொம்பவே எண்ணெய் பிசுக்கா இருக்கறதுனு பொடுகு வர்றதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. சீஸன் மாறும்போதும் சிலருக்கு இந்த தொல்லை ஏற்படும். அதனால... பொடுகு வந்ததும் முதல் வேலையா, காரணத்தைக் கண்டுபிடிச்சு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். பார்லர்கள்ல 'ஸ்பெஷல் டேண்ட்ரஃப் ட்ரீட்மென்ட்இருக்கு. இது, பத்து நாளைக்கு ஒரு தடவைனு மொத்தம் ஆறு சிட்டிங்ஸ்.
ஒவ்வொரு சிட்டிங்கிலும் நாலு ஸ்டெப் ட்ரீட்மென்ட் கொடுப்போம். முதல்ல, ஸ்பெஷல் ஆன்டி டேண்ட்ரஃப் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்வோம். இப்படி தலையை க்ளீன் பண்ணலைனா, எடுத்துக்கற ட்ரீட்மென்ட்டே வேஸ்டாகிடும். அடுத்ததா... ஆன்ட்டி டேண்ட்ரஃப் புராடக்டை பயன்படுத்தி சில வகையான மசாஜ் கொடுப்போம். பிறகு, வெறும் தண்ணியில நல்லா வாஷ் பண்ணி, கடைசியா கூல் டிரை பண்ணிடுவோம். பெரும்பாலும் ஆறு சிட்டிங்லயே பொடுகு தொல்லைக்குத் தீர்வு கிடைச்சுடும்.    
இதுல இன்னொரு முக்கிய விஷயம் என்னன்னா... பொடுகு இருக்கும்போது ஸ்ட்ராங்கான ஷாம்பு யூஸ் பண்ணக் கூடாது. முடிக்கு போடும் மாஸ்க்கும் மைல்டாதான் இருக்கணும். தலை ஈரமா இருக்கும்போது சீவவோ, இறுக்கமா கட்டவோ கூடாது. பெரிய பல்லு இருக்குற சீப்புதான் யூஸ் பண்ணணும். தலையில வெயில் நேரடியா படாத மாதிரி, நல்லா கவர் பண்ணிக்கணும். முக்கியமான விஷயம்... ஸ்டைலிங் புராடக்ட்ஸ் யூஸ் பண்ணக் கூடாது. ட்ரீட்மென்ட் எடுத்துக்கறதோட நிறுத்திடாம, நாங்க சொல்ற வழிமுறைகளையும் விடாம ஃபாலோ செய்தாலே போதும்... பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிச்சுடலாம்.
ஹேர் கண்டிஷனர் மற்றும் சீரம் பத்தி அடுத்து சொல்றேன்.''
பாரம்பரியம்!
''தலை முடியைக் கட்டி காரை இழுக்கறது, கல்லைத் தூக்குறது இப்படி நிறைய நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த அளவுக்கு உறுதியானது கூந்தல். ஆனா, தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, சரியான முறையில் தேய்க்கலைனா... எவ்வளவு ஸ்ட்ராங்கான முடியும் ஈஸியா உடைஞ்சுடும்'' எனச் சொல்லும் 'கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக்கீதா அஷோக், பாரம்பரிய முறையில் பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் வழிமுறைகளைப் பகிர்கிறார்.

''தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது கண்டிப்பா கையால தேய்க்கக் கூடாது, பஞ்சுல எண்ணெயைத் தொட்டு முடியோட வேர்க்கால்கள்ல படற மாதிரி ஒத்தி ஒத்தி எடுக்கணும். இதுதான் சரியான முறை. கண்டிப்பா, எண்ணெயை தலையில வரவரனு தேய்க்கக் கூடாது. இதனால முடி சுலபமா உடைஞ்சு வலுவிழந்துடும். அதேமாதிரி, தலைக்கு குளிச்சுட்டு டவலால தலைமுடியை அடிச்சு துவட்டினாலும் முடி உடைஞ்சு வலுவிழந்துடும். ஹேர் டிரையரால முடியை காய வைக்கும்போது, அதுல இருக்கும் 'கூல் மோடையூஸ் பண்ணுங்க. இதெல்லாமே முடியை பாதிப்பிலிருந்து காக்கும் எளிய வழிமுறைகள்.
இதெல்லாம் சின்ன லெவல் பிரச்னைதான். முடியைப் பொறுத்தவரை பெரிய பிரச்னைனு பாத்தா, அது பொடுகுத் தொல்லைதான். இதுல ரெண்டு வகை இருக்கு. ஸ்கர்ஃபி மற்றும் ஸ்கேலி. முதலில் ஸ்கர்ஃபி டேண்ட்ரஃப்னா என்ன.. அதுக்கான தீர்வுகள் என்னங்கறதையெல்லாம் சொல்றேன்.
தலை ரொம்ப வறண்டுபோய், வெள்ளை கலர்ல செதில் செதிலா இருக்குமே, அதுதான் ஸ்கர்ஃபி டேன்ட்ரஃப். இதனால தலையில அரிப்பு ஏற்படும், முடி கொட்டும். நெற்றி, கன்னம், மார்பு மற்றும் முதுகு பகுதியில சிறுசிறு கொப்புளங்கள் வரும். இதுக்கு, விளக்கெண்ணெய் நூறு மில்லி, ஆலிவ் ஆயில் நூறு மில்லி எடுத்துக்கிட்டு, அதுல லேவண்டர் ஆயில் 25 சொட்டு, கெரேனியம் ஆயில் 25 சொட்டு கலந்து வெச்சுக்கணும். தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்துல தண்ணியை விட்டு,அதுக்குள்ள இன்னொரு பாத்திரத்தை வெச்சு, அதுல தேவையான அளவு எண்ணெய்க் கலவையை விட்டு சூடுபடுத்தணும். அதை பஞ்சுல தொட்டு தினமும் ராத்திரியில முடியோட வேர்க்கால்கள்ல படறமாதிரி ஒத்தி ஒத்தி எடுக்கணும். அதிக அழுத்தம் கொடுக்காம, விரல்களால மெதுவா மஸாஜ் செய்யணும்.
காலையில எழுந்ததும், தண்ணி சேர்க்காம அரைச்ச திக்கான தேங்காய்ப் பால் பத்து மில்லி எடுத்து, அதுல 'ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூல்' (evening primrose oil capsule) ரெண்டு உடைச்சு ஊத்தி (அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்), இந்தக் கலவையை பஞ்சுல தொட்டு தலையில தேய்ச்சு, அரை மணி நேரம் ஊற வைக்கணும். பிறகு, மைல்ட் ஷாம்பு யூஸ் பண்ணி தலையை அலசணும். முக்கியமான விஷயம், ஸ்கர்ஃபி டேண்ட்ரஃப்க்கு தலையை சுடுதண்ணியில அலசக் கூடாது. அப்புறம் சிகைக்காய், எலுமிச்சை பக்கமும் தலை வெச்சுக்கூட படுத்துடாதீங்க. இந்த மூணு விஷயமும் பொடுகை அதிகமாக்கிடும்.
ஸ்கேலி டேண்ட்ரஃப் பத்தி தொடர்ந்து பேசுவோம்.




No comments:

Post a Comment