உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, ஃபெவிக்விக் நிறுவனத்தின் விளம்பரம் பலரையும் கவர்ந்தது.
கடந்த 15 ஆம் தேதி உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் போது இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில், தினமும் நடைபெறும் கொடி இறக்க நிகழ்ச்சியை மையமாக வைத்து ஃபெவிக்விக் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அதாவது அணிவகுப்பில் பங்கேற்கும் பாகிஸ்தான் ராணுவ வீரரின் காலணி பிய்ந்துவிடுகிறது. அதனை பார்க்கும் இந்திய ராணுவ வீரர் ஃபெவிக்விக் போட்டு அதனை ஒட்டி விடுகிறார்.
பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இது போன்று ஏராளமான விளம்பரங்கள் வந்துள்ளன. ஆனால் ராணுவத்தை மையமாக கொண்டு நகைச்சுவை உணர்வுடன் தயாரிக்கப்பட்டுள்ளதுதான் இந்த விளம்பரத்தின் சிறப்பம்சம்.
மும்பையை சேர்ந்த ஓஜிவ்லி மேதர் விளம்பர நிறுவனம் இந்த விளம்பரத்தை ஃபெவிக்விக்கிற்காக தயாரித்துள்ளது.
'பிரச்னைகளை தீருங்கள்' என்பதே இந்த விளம்பரத்தின் கருத்து என்றும், வேறு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் ஓஜிவ்லி மேதர் விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
17 Feb 2015
பாகிஸ்தான் ராணுவத்தை கிண்டலடிக்கிறதா அந்த விளம்பரம்...?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment