சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Feb 2015

ஒரே போட்டி... பல சாதனைகள்...!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்துள்ளார் தென் ஆப்ரிக்க அணி வீரர் டேவிட் மில்லர்.

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும், டுமினியும் சதமடித்து சாதனை படைத்தனர். 138 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த மில்லர் இறங்கிய முதல் உலகக் கோப்பை போட்டி இதுதான். இதனால் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே சதமடித்த இரண்டாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையை மில்லர் பெற்றுள்ளார். இதற்கு முன், தென் ஆப்ரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் முதல் உலகக் கோப்பை ஆட்டத்திலேயே 188 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

டேவிட் மில்லரும், டுமினியும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டியில் ஐந்தாவது விக்கெட் இணை அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதோடு 5வது வீரராக களமிறங்கி மில்லர் 138 ரன்கள் அடித்ததும் ஒரு புதிய சாதனைதான்.

உலகக் கோப்பை போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தும் டேவிட் மில்லர் நேற்று புதிய சாதனை புரிந்துள்ளார். இந்த போட்டியில் அவர் மொத்தம் 9 சிக்சர்கள் விளாசினார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங்,கில்கிறிஸ்ட் ஆகியோர் 8 சிக்சர்கள் அடித்திருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 339 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 277 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 



No comments:

Post a Comment