சிலுவையில் நின்னு ஆணியடிச்சுக்கிட்ட பரபரப்பான சூழலில் ஹூசைனியும், மதுரை ஆதீனமும் ரகசியமா சந்திச்சுக்கிட்டா (ஆமாங்க...நமக்காகத்தான்), அவங்க சந்திப்புல என்ன பேசியிருப்பாங்க. இதோ...
ஆதீனம்: வணக்கம் ஹூசைனி தம்பி. அம்மாவோட பிறந்தநாளை முன்னிட்டு பிரமாதப்படுத்திட்டீங்க போங்க. என்ன ஒண்ணு, நான் பண்ணலாம்னு யோசிச்சேன். நீங்க முந்திட்டீங்க!
ஹூசைனி: என்னது... நீங்களும் என்னைப்போல சிலுவையில் ஆணி அடிக்க நினைச்சிருந்தீங்களா?
ஆதீனம்: அய்யோ... அதெல்லாம் இல்லீங்க தம்பி, நான் நினைச்சது அதுக்கும் மேல.
ஹூசைனி: அதுக்கும் மேலேனா, ஆணிக்குப் பதிலா ஆப்பு அடிக்கலாம்னு நினைச்சீங்களா?

ஆதீனம்: என்ன தம்பி, என்னைப் பார்த்தா கிண்டலா தெரியுதா? வத்தல் மாதிரி இருக்கிற என் உடம்புல ஆப்பால அடிச்சா பீஸாயிட மாட்டேன். நான் நினைச்சது அதுக்கும் மேல தம்பி!
ஹூசைனி: கடப்பாறையால குத்தலாம்னு ஐடியாவா?
ஆதீனம்: தம்பி என்னை போட்டுத்தள்ளணும்னே நினைச்சுட்டீங்களா? உண்மையில் நான் நினைச்சது, தலையை சுத்தி கட்டியிருக்கிற ருத்திராட்ச மாலைக்குப் பதிலா ஏசுவோட முள்கிரீடம் மாதிரி செட்டப் பண்ணி மாட்டிக்கிட்டு, அம்மாவோட பிறந்தநாளுக்கு நேர்த்திக்கடன் கொடுக்கறதுதான். ஆனா, முன்கூட்டியே உங்களோட ஆணியடிக்கிற வேலை தெரிஞ்சதால என்னோட முள்முடியைத் தள்ளிப் போட்டுட்டேன்!
ஹூசைனி: எப்படி என்னோட சாகசம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிஞ்சுது? யாரு உங்ககிட்ட சொன்னது?
ஆதீனம்: இதிலென்ன சந்தேகம்? சாட்சாத் சிவபெருமானேதான் கனவுல வந்து சொன்னார்.
ஹூசைனி: அதெப்படி உங்க கனவுல மட்டும் அடிக்கடி வர்றார்?
ஆதீனம்: என் கனவுல சிவன் வர்றதா தம்பி அதிசயம்? அனுஷ்கா வந்தாதான் ஆச்சர்யம். எங்கப்பன் சிவன் வர்ற வீட்டுக்குள்ளேயோ, மனக்கூட்டுக்குள்ளேயோ அனுஷ்காவுக்கு இடமில்லை தம்பி.
ஹூஷைனி: அதுசரி, சிவன் வந்து என்ன சொன்னார்?
ஆதீனம்: பக்தனே, நீ முள்முடி வைத்து மக்கள் முதல்வரோட மனசுல இடம்பிடிக்கப் பார்க்கிறே, ஆனா இன்னொருத்தர் தன் உடம்பையே சிலுவையில் அறைஞ்சு மக்கள் முதல்வரோட மனசுல இடம்பிடிக்கப் பார்க்கிறார். அவர் கராத்தே, வில்வித்தைனு எல்லாத்திலேயும் பெரியாளு, நீ வாய் வித்தையை மட்டுமே நம்பிப் பிழைக்கிற ஆளு. அதனால இந்தத் திட்டத்தை இப்போதைக்கு கைவிட்டுடுனு சொன்னார்!
ஹூசைனி: பரவாயில்ல, என்னோட சாதனை முயற்சி, சிவனையும் ஒரு உலுக்கு உலுக்கிடுச்சு போல!
ஆதீனம்: நீங்க அம்மாவோட உருவச்சிலை செய்றதுக்காக, அட்டை மாதிரி ரத்தத்தை உறிஞ்சுனப்பவே சிவனுக்கு உங்களோட வித்தையெல்லாம் தெரிஞ்சுடுச்சு! அப்பவும் கனவுல வந்து உங்களைப் பத்திதான் லெக்சர் அடிச்சுட்டுப் போனார்.
ஹூசைனி: ஆச்சர்யமா இருக்கே... அப்போ என்ன சொன்னார்?
ஆதீனம்: அம்மாவுக்கு ஜால்ரா தட்டுறதுல உனக்கு செம டஃப் கொடுக்கப்போற ஆளு இவர்தான்னு சொன்னார். அதே மாதிரிதான், நீங்க கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குறீங்க தம்பி.
ஹூஷைனி: பின்னே, நானும் எம்புட்டு நாளைக்குதான் வில்லு, அம்பு, கராத்தேன்னு திரியிறது? கவுன்சிலராகவோ, அமைச்சராகவோ மாறி, அம்மாகூட சேர்ந்தே சட்டசபைக்குள்ள நுழையணும்.
ஆதீனம்: நீங்க இப்படி வித்தியாசமா பண்ணிட்டதால அமைச்சருங்கள்ள இருந்து அ.தி.மு.க-வோட அடிமட்ட தொண்டர்கள்வரை அம்புட்டு பேரும் உங்க மேல கோபத்துல இருக்கிறது தெரியுமா?
ஹூசைனி: அவங்களை நான் என்ன பண்ணினேன் சாமி?
ஆதீனம்: வழக்கமா அம்மாவோட பிறந்தநாளுக்கு பால்குடம் எடுக்கிறது, அங்கப்பிரதட்சணம் பண்றது, தங்கத்தேர் இழுக்கிறது, அன்னதானம்னு நோகாம நோம்பு கும்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க. இப்போ நீ ஆணியடிச்சதால அவங்க அதுக்கும் மேல பண்ணியாக வேண்டியிருக்கே தம்பி. எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ தம்பி!
ஹூசைனி: இதை நான் எதிர்பார்க்கவேயில்லையே!
ஆதீனம்: நீ இப்படி சீன் போடுவேனு நாங்களும்தான் எதிர்பார்க்கல. அதுசரி, கால், கையில ஆணியடிச்ச இடத்துல என்னோட ஞானப்பாலை கொஞ்சமா தெளிக்கிறேன். சட்டுனு காயம் ஆறிடும், வாங்க தம்பி!

No comments:
Post a Comment