சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Feb 2015

கிரீன்லாந்துக்கு ஒரு செலவில்லாத இன்ப பயணம்!

ங்களுக்கான வைகிங் கப்பல் காத்திருக்கிறது... கிரீன்லாந்தில் உலாவலாம் வாருங்கள்!' என இணையவாசிகளுக்கு கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த அழைப்பை ஏற்றால் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே, பனிபடர்ந்த அற்புதமான கிரீன்லாந்தில் இணைய உலா சென்று வரலாம்.

கூகுள் நிறுவனம் தனது வரைபட சேவை மூலம் ஸ்டிரீட்வியூ வசதியை வழங்கி வருகிறது. ஸ்டிரீட்வியூ மூலம் குறிப்பிட்ட நகரில் உள்ள முக்கிய இடங்களை 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்க முடியும். விஷேச காமிரா மூலம் சுற்றுப்புறத்தின் காட்சிகளை அனைத்து கோணங்களிலும் படம்பிடித்து அவற்றை 360 டிகிரி காட்சியாக கூகுள் தொகுத்து தருகிறது.

ஸ்டீரிட்வியூ சேவையில் இப்போது பனி படர்ந்த அற்புதம் என வர்ணிக்கப்படும் கிரீன்லாந்து தீவை கூகுள் சேர்த்துள்ளது. கூகுள் ஸ்டிரீட்வியூ சேவை செயல்படும் 66 வது நாடாக கிரீன்லாந்து அமைகிறது. கிரீன்லாந்து மிகப்பெரிய தீவாக கருதப்பட்டாலும் மிக குறைவான மக்கள் தொகை கொண்டதாக இருக்கிறது. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து, டென்மார்கிற்கு உட்பட்ட தன்னாட்சி பெற்ற தேசமாக திகழ்கிறது.

வட அமெரிக்க கண்டம் அருகே இருந்தாலும், கலாச்சார  ரீதியாக ஐரோப்பாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட கிரீன்லாந்து, மற்ற நாடுகள் போல அதிகம் அறியப்படாத நாடாக திகழ்கிறது. எனினும் அந்நாட்டில் பனிபடர்ந்த பிரதேசத்திற்கு நடுவே பல வரலாற்றுச்சின்னங்களும் , இயற்கை அற்புதங்களும் இருக்கின்றன. இத்தகைய முக்கிய இடங்களை எல்லாம் இப்போது ஸ்டீரிட்வியூ காட்சியாக பார்க்க முடியும்.
நார்வே பகுதியை சேர்ந்த வைகிங் வம்சத்தை சேர்ந்த எரிக் தி ரெட்,  கிரீன்லாந்தை முதலில் கண்டுபிடித்தார். அதையடுத்து வைங் இனத்தினர் அங்கு குடியேறினர். இவரால் அமைக்கப்பட்ட முதல் வைகிங் குடியிருப்பு பகுதியான பிராட்டாஹில்ட் உள்ளிட்ட முக்கிய இடங்கள் ஸ்டிரீட் வீயூவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் பனிப்பாறையான இல்லுலிசாத் ஐஸ்போர்டையும் காணலாம். இது கிரீன்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருப்பதுடன், யுன்ஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் இருக்கிறது.

கிரீன்லாந்தின் முதல் தேவாலயம் உள்ளிட்ட இடங்களையும் இதில் காணலாம். இதே போல சில வாரங்களுக்கு முன் வங்கதேசத்தில் உள்ள முக்கிய இடங்களையும் கூகுள் தனது ஸ்டிரிட்வியூ பார்வைக்குள் கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்தை காண: https://www.google.com/maps/views/streetview/greenland-highlights?gl=us




No comments:

Post a Comment