சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

23 வயதில் ஒரு கேப்டன்!

ந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆக இளம் வயது வீரர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உஸ்மான் கானி.

ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையில் விளையாடியுள்ள 76 போட்டிகளில் 50 ல் வெற்றி பெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பை போட்டியில் தோல்வியே காணமால் வெற்றி பெற்று வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில்,  காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்ளாதேஷ் அணியில் அதிகபட்சமாக 7 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இங்கிலாந்து அணி 1979, 1987 மற்றும் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி மூன்று முறையும் கோப்பையை வெல்லாமல் கோட்டை விட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 338 ரன்கள் குவித்தது. சளைக்காத இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடி 338 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன் எடுத்த அணி இங்கிலாந்துதான்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிகமுறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி நியூசிலாந்துதான். இந்த அணி 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்தான் அதிக வேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் 50 ரன்களை அவர் கடந்தார்.

உலகக் கோப்பை போட்டிக்கு மூன்றாவது முறையாக விளையாடத் தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி, இதற்கு முன் விளையாடியுள்ள 8 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது
உலகக் கோப்பைத் தொடரில், இலங்கை அணி கனடா அணியை 36 ரன்களில் ஆல்அவுட் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக இலங்கை வீரர் லசித் மலிங்கா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினுக்குதான் உண்டு. 1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 278 ரன்களை அவர் குவித்துள்ளார்.

பெர்முடா அணிக்கு எதிராக கடந்த 2007ஆம் ஆண்டு, இந்திய அணி 413 ரன்களை குவித்தது. இதுதான் உலகக் கோப்பையில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.

உலகக் கோப்பைத் தொடரில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 329 ரன்களை விரட்டி வெற்றி பெற்ற அணி அயர்லாந்து

உலகக் கோப்பைத் தொடரில் மிக விரைவாக சதமடித்த வீரர் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு 50 பந்துகளில் அவர் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்
தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் ஹாரிஸ் சொகைலிஸ்.

அண்மையில் 31 பந்துகளில் சதமடித்த டி வில்லியர்ஸ் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன்.

தென் ஆப்ரிக்க அணி மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி மூன்று முறையும் தோல்வி கண்டுள்ளது.

யு.ஏ.இ அணியில் முகமது தாகீர், குர்ராம் கான் எனும் இரு வீரர்கள் 43 வயது நிரம்பியவர்கள்.

21 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23  வயது ஜேசன் ஹோல்டர்தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஆவார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சளைக்காமல் தோல்வியை மட்டுமே சந்தித்து  வந்துள்ள அணி ஜிம்பாப்வே. தற்போது கத்துக்குட்டி அணிகள் வந்த பிறகுதான் ஜிம்பாப்வே அணி அவ்வப்போது வெற்றியை ருசிக்கிறது. No comments:

Post a Comment