சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2015

சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த கிறிஸ் கெயில்..!

லகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இரட்டை சதமடித்த வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பெற்றுள்ளார். இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்த அரிய சாதனையை கிறிஸ் கெயில் நிகழ்த்தினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'பி' பிரிவில் கான்பெராவில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. இந்த போட்டியின் போது அபாரமாக விளையாடிய கிறிஸ் கெயில் 105 பந்துகளில் சதமடித்தார்.

இதில் 5 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு பின், சரவெடி ஆட்டம் ஆடிய கெயில் 138 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவு செய்து உலக சாதனை படைத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 16 சிக்சர்கள் கெயில் அடித்திருந்தார்
.40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் 200 ரன்களை அடித்தது இல்லை என்ற வரலாற்று சாதனையை கெயில் படைத்தார். ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித்சர்மா,  இலங்கைக்கு எதிராக  264 ரன்கள் அடித்தே அதிகபட்ச சாதனை ஆகும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி,  இந்திய வீரர் சச்சின் ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதமடித்து சாதனை படைத்திருந்தார். இப்போது அதே பிப்ரவரி 24ஆம் தேதி கெயில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதற்கு முன் கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்ரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் யு.ஏ.இ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 பந்தில் கேரி கிறிஸ்டன் 188 ரன்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்களில் 372 ரன்களை எடுத்தது. ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 368 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்சாமுவேல்ஸ் இந்த போட்டியில் 133 ரன்களை குவித்தார். சாமுவேல்சும், கெயிலும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்ததும் புதியஉலகசாதனைதான்.இதற்கு முன் இலங்கைக்கு எதிரான போட்டியில்  இந்திய வீரர்கள்  கங்குலி டிராவிட் ஜோடி 318 ரன்களை அடித்ததுதான் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இந்த போட்டியின் கடைசி பந்தில் அவுட் ஆன கெயில், 147 பந்தகளில் 215 ரன்கள் அடித்திருந்தார்.  டெஸ்ட் போட்டியில் முச்சதம் , ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், 20 ஓவர்கள் போட்டியில் சதமடித்த வீரர் கெயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெயில் சாதனை எப்படி?
------------------------------------

0-51- 51 பந்துகளில் அடித்தார்
51- 100-  54 பந்துகளில் கடந்தார்.
101-150-  22 பந்துகளில் அடித்தார்
150-200 - 12 பந்துகளில் கடந்தார்.



No comments:

Post a Comment