ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலான இடைபட்ட ரயில்பாதையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட ரயில்வே கேட்கள் உள்ளன. மண்டபம் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள உச்சிபுளியில் இருந்து, அரியமான் கடற்கரை முன் உள்ள ரயில்வே கேட், மண்டபம் ரயில்வே கேட்டிலிருந்து 12 கி.மீ உள்ளது.
அரியமான் கடற்கரை பகுதியான “குஷி பீச்சுக்கு” அதிகமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்கள் மூலமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் அதிகமான சுற்றுலா வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். ஆகவே விபத்தை தடுப்பதற்காக 2 மாதத்திற்கு முன் ரயில்வே கேட் கீப்பராக தேவராஜன் (வயது 52) பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
எந்த ரயிலாக இருந்தாலும் ராமேஸ்வரத்திலிருந்து வரும் போதெல்லாம் இந்த கேட்டை தாண்டிதான் செல்ல வேண்டும். வண்டி வரும்போதெல்லாம் வாகனங்களை நிறுத்தி மக்களுக்கு உதவியும் வருகிறார். ரயில்வே கேட் கீப்பர் நியமிக்கப்பட்டும், தங்குவதற்கோ ஒரு அறை கூட கிடையாது. வெயிலில்தான் நின்று தன் வேலையை செய்து வருகிறார். ரயில் வராத நேரங்களில் பனை ஓலைகளால் அமைத்துள்ள சிறு கூடாரத்தில் தரையில் அமர்ந்து கொள்கிறார்.
இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ரயில்வே நிர்வாகம்?
No comments:
Post a Comment