அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படத்தின், இரண்டாவது ஹீரோவாக நடித்த கலையரசனுக்கு ‘மெட்ராஸ்’ 5-வது படம். ஆனால், இப்போது மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த ஹீரோவாகி விட்டார் கலையரசன். பாபி சிம்ஹாவுடன் ‘உறுமீன்’ படத்தில் செம பிஸியாக இருந்தவர், செம ஹேப்பியாகவும் இருந்தார். காரணம், இன்றைக்கு கலையரசனுக்குப் பிறந்த நாள். அதைவிட ஹேப்பியான விஷயம் - நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசை ஒன்று நிறைவேறியதை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் மனைவி மூலமாக அது நிறைவேறியதில், கலை இன்னும் ஹேப்பி!
விஷயம் இதுதான் - சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே, ‘உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும். அதுக்கு பெஸ்ட் சைக்கிளிங்தான்; காஸ்ட்லியா ஒரு சைக்கிள் வாங்கணும்டா செல்லம்’ என்று மனைவி பிரியாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாராம் கலை. இன்றைக்குக் கண்விழித்தபோது, தான் மிகவும் விரும்பிய ‘கேனான் டேல்’ என்னும் சைக்கிளை தடாலெனப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி தந்து விட்டாராம் ப்ரியா.
‘‘செம ஆச்சரியம் சார். உண்மையைச் சொல்லணும்னா, இப்போதைக்கு நமக்கு ஜாகுவார் வாங்கணும்; ரோல்ஸ்ராய்ஸ் வாங்கணும்னு எல்லாம் ஆசை இல்லை. ஜாகுவார் ஸ்டிக்கர்கூட என்னால வாங்க முடியாதுங்கறது வேற விஷயம். உடம்பை ஃபிட்டா வெச்சுக்க, காஸ்ட்லியா ஒரு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசைப்பட்டேன். கைல காசு இல்லை. பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன்.
இப்போதான் ஹீரோ ஆகிட்டேனே! சைக்கிள் வாங்கணும்ங்கிற ஐடியா மறந்து, நேரமும் இல்லாமப் போயிடுச்சு. திடீர்னு என் பொண்டாட்டி ப்ரியா, என் பிறந்த நாளப்போ சைக்கிள் சாவியைக் குடுத்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னோட ‘கேனான் டேல் சைக்கிள்’ 40,000 ரூபாய். இனிமேல் நேரம் இல்லைன்னு சொன்னா உதைதான் விழும். நேரம் ஒதுக்கணும். இண்டோர் ஷூட்டிங்னா சைக்கிள்லேயே போயிடலாம்னு பார்க்கறேன். நாளைல இருந்து ஒர்க்-அவுட் ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான். எப்படியாவது விஜய் சார், தனுஷ் மாதிரி சிலிம் ஆகிக் காட்டணும்! அதான் என்னோட ஆசை! என் பொண்டாட்டி புண்ணியத்துல ஒரு நாள் தனுஷ் மாதிரி ஆகிக் காட்டுறேன்! ஐ லவ் யூ பொண்டாட்டி!’’ என்று ‘மெட்ராஸ்’ அன்புவாக மாறி, மனைவி மீது பாசத்தைப் பொழிய ஆரம்பித்தார் கலையரசன்.

No comments:
Post a Comment