சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Feb 2015

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

புலிகளின் இரைப் பட்டியலில் மனிதர்கள் இல்லை. அதனால் மனிதர்களை கண்டவுடன் புலி தாக்கத் துணிவதில்லை. முதுமலை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் புலிகள் வயதாக வயதாக வேட்டையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. வயது முதிர்வு காரணமாக மின்னல் வேகத்தில் ஓடும் மான்களை புலிகளால் துரத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

இது போன்ற சமயங்களில்தான் புலிகளோ, சிறுத்தைப் புலிகளோ மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வர ஆரம்பிக்கின்றன. கிராமங்களுக்கு இரை தேடி வரும் புலிகள் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை அடிக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் புலியை விட மனிதர்கள் உயரமாக இருப்பதால் நம்மை விட பலசாலி என்ற நினைப்பில் மனிதர்களை தாக்க துணியாது. எதிர்பாராத சமயங்களில் ஒரு முறை மனிதர்களை புலி கொன்று சுவைத்து விட்டால், அதற்கு பின் அந்த புலி, மேன் ஈட்டராக மாற வாய்ப்பு உண்டு. அதாவது மனித உடலில் உள்ள உப்பு சுவை  புலிக்கு ஒரு வித வித்தியாசமான அனுபவத்தையும் ருசியையும் கொடுத்து விடுகிறது
மேலும் காட்டில் பல கிலோ மீட்டர் ஓட்டத்திற்கு பிறகுதான் அதனால் ஒரு மானை வேட்டையாட முடியும். ஆனால் மனிதர்கள் புலியை பார்த்தாலே இறக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால் புலிக்கு எளிதான உணவாக மனிதர்கள் அமைந்து விடுகிறார்கள்.. கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 3  பேரை கொன்ற புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஏனென்றால் அந்த புலி தொடர்ச்சியாக மனிதர்களை அடித்து சாப்பிட்டு பழகி விட்டது. மேன் ஈட்டராக அது மாறி விட்டதால்தான் அதனை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட அந்த புலிக்கு பல் இல்லாத காரணத்தினால் அதனால் வேட்டையாட முடியாத சூழலில் கிராமப்பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அடித்துக் கொல்ல பழகிவிட்டது.  தற்போது கூடலூரிலும் புலி ஒன்று பெண்ணை அடித்து கொன்றுள்ளது. இனிமேல் அந்த புலி அடுத்தடுத்து மனிதர்களை குறி வைத்துதான் காத்திருக்கும்.
இன்னொரு உயிர் பலியாவதற்குள், இதுபோன்ற புலிகளை பிடித்து வன உயிரியியல் பூங்காக்களில் பராமரிப்பதே நல்லது.



No comments:

Post a Comment