சுதந்திர தின அணி வகுப்பு மரியாதையின்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சுதந்திர தின நிகழ்வில், அணி வகுப்பு மரியாதையின் போது அதிபரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதனையடுத்து அது குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, குண்டு துளைக்காத விசேஷ மேலாடையை அணிந்திருந்தாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது அதிபர் மைத்திரி பால சிறிசேன உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறித்து கடந்த வாரம் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது. 1981 ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டது போல் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாத், அணி வகுப்பு மரியாதையை அவதானித்து கொண்டிருந்தபோது, அணி வகுப்பில் கலந்து கொண்ட ராணுவ அணி ஒன்று, தமது வாகனங்களில் இருந்து இறங்கி ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்களை சுட்டுக்கொன்றது. இவ்வாறான தாக்குதல் ஒன்று சுதந்திர தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புச் செயலாளர் பீ.எம்.யு.டி. பஸ்நாயக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தார். அப்படியான தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அதிகாரிககளை அழைத்து பேச்சுவார்த்தைகளையும் அரசு தரப்பினர் நடத்தியிருந்தனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தைகளில் விரிவாக ஆராயப்பட்டதாக இது பற்றி தகவலை வழங்கிய அரசு தரப்பு வட்டாரம் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. யாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது. தாக்குதலை திட்டமிட்டது யார் ஆகிய முக்கியமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. தகவல் நம்பிக்கை தரக் கூடிய மட்டத்தில் இருந்து கிடைத்ததாக கூறியுள்ள அந்த வட்டாரம், கூடுதல் தகவல்கள் எதனையும் வழங்கவில்லை. தகவல் கிடைத்த தினத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சுதந்திர தினத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வந்தனர். ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வை எளிமையாக கொண்டாட தீர்மானித்ததை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளும் சுலமானதாக கூறப்படுகிறது. முந்தைய அரசு, ராஜபக்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில் இம்முறை சுதந்திர தினத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்த திட்டதை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
24 Feb 2015
இலங்கை அதிபர் சிறிசேனவை கொல்ல முயற்சி: பரபரப்பு தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment