நடையாக நடக்க வேண்டியிருக்கிறது என
எப்போதாவது நொந்துகொள்ள நேர்ந்தால் அமெரிக்க தொழிலாளி ஜேம்ஸ் ராபர்ட்சனை நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடையாக நடக்க வேண்டும் என்றாலும் அவரை
நினைத்துக்கொள்ளுங்கள்,
தானாக ஊக்கம் பிறக்கும்.
ஏனெனில் அவர்
தினமும் 33 கிமீ நடந்து வேலை
பார்த்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக, தனது
பணியிடத்திற்கு இப்படி 33 கி.மீ தொலைவு நடந்து வந்து கொண்டிருக்கும் இந்த
கடமை வீரரின் மன
உறுதியையும், ஈடுபாட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள், இணையம் மூலம் கைகொடுத்து அவருக்கு கார்
வாங்கி கொடுக்க நிதியை அள்ளிக்கொடுத்துள்ளனர்.
அவருக்கு கார் வாங்குவதற்காக 25,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தற்கு மாறாக ஒரே நாளில் ஒரு லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக அள்ளிக்கொடுத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு ராபர்ட்சனின் கதை பலரையும் நெகிழ வைத்து, அவரது கடமை உணர்விற்கு ஹேட்ஸ் ஆப் சொல்ல வைத்திருக்கிறது. ஜேம்ஸ் ராபர்ட்சனுக்கு இப்போது 56 வயதாகிறது. அவரை பார்த்தால் அப்பாவி மத்தியதர பெரியவர் போல் தோன்றும். ஆனால் அந்த மனிதரின் செயலோ ஒலிம்பிக் வீரர் போல இருக்கும். 33 கி.மீ நடப்பது என்றால் சும்மாவா? ஆனால் ராபர்ட்சன் கடந்த பத்தாண்டுகளாக வாரத்திற்கு 5 நாட்கள் இப்படிதான் 33 கி.மீ நடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். ராபர்ட்சன் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் வசிக்கிறார். அங்கிருந்து பல மைல் தொலைவில் இருக்கும் ரோக்ஸ்டர்ஸ் மலைப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அவர் வேலை பார்க்கிறார். அவர் வசிக்கும் இடத்தில் இருந்து தொழிற்சாலைக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது. பஸ்சை பிடிக்கவே அவர் கிட்டத்தட்ட 10 கி.மீ தொலைவு நடக்க வேண்டும். அதே போல தொழிற்சாலையில் பணியை முடித்ததும் முதலில் சில கி.மீ தொலைவு நடக்க வேண்டும். அங்கிருந்து பஸ் பிடித்து சென்று பின்னர் மீண்டும் சில கி.மீ நடந்து சென்றுதான் வீட்டிற்கு செல்ல வேண்டும். கூட்டிக்கழித்து பார்த்தால் அவர் எப்படியும் 21 மைல் (33 கி.மீ) நடக்க வேண்டும். அநேகமாக காலையில் நாலு மணிநேர பயணம் ; இதே போல இரவு நான்கு மணி நேர பயணம் செய்கிறார். இதில் பஸ் பயணம் போக மற்ற நேரம் எல்லாம் நடை தான். ஆனால் மனிதர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்படி நடையாக நடந்து தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன் அவரிடம் இருந்த கார் பழுதாக புதுப்பிக்க முடியாமல் போனதில் இருந்து இதே நிலைதான். அவர் ஓரளவுக்கு நன்றாக சம்பாதித்தாலும் புதிய கார் வாங்கி பராமரிக்கும் அளவுக்கு வசதி இல்லாததால் கர்ம யோகியை போல நடந்து சென்று கொண்டிருக்கிறார்.
இப்படி படாதபாடு பட்டாலும் ராபர்ட்சன், தனது
நிலையை நினைத்து புலம்பியதில்லை. ஒரு
நாள் கூட வேலைக்கு செல்லாமல் இருந்ததில்லை. இவ்வளவு ஏன்
தாமதமாக சென்று மன்னிப்பு கேட்டதும் இல்லை. அந்த
அளவுக்கு வேலையை நேசிப்பவர் கடும் வெய்யில் அல்லது புயல் மழைக்கு நடுவிலும் தவறாமல் வேலைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
அவர் பணியாற்றும் நிறுவன உயரதிகாரி , ராபர்ட்சன்தான் மற்ற ஊழியர்களுக்கான முன்னுதாரணம் என்று பாராட்டுகிறார். "இவரால் பனியிலும், மழையிலும் பல மைல் நடந்து வேலைக்கு வரமுடிகிறது என்றால் அருகிலேயே இருப்பவர்கள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் போகலாமா? என மற்றவர்களிடம் கேட்பேன்!' என்கிறார் வில்சன் எனும் அந்த அதிகாரி. ராப்ட்சனின் இந்த மராத்தான் நடை பயணம் நம்ப முடியாமல் இருக்கிறதா? சமீபத்தில் 'டெட்ராய்ட் ப்ரி பிரஸ்' நாளிதழ், இது பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டபோது அதை படித்த பலருக்கும் இப்படி தான் இருந்தது. அந்த கட்டுரை வெளியான பிறகு நடந்ததும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது. ராபர்ட்சன்னின் மன உறுதியால் வியந்து போனவர்களில் ஒருவரான கல்லூரி மாணவர் இவான் லீடி என்பவர் , இவருக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும் என நினைத்தார். கடமையை பெரிதாக நினைக்கும் ராபர்ட்சன், வேலைக்கு சென்று வர கார் வாங்கித்தர வேண்டும் என்பதற்காக இணையம் மூலம் நிதி திரட்டுவதற்காக 'கோ ஃப்ண்ட் மீ' நிதி திரட்டும் தளத்தில் ,ஒரு பக்கத்தை அமைத்து நிதிக்கான கோரிக்கையை வைத்தார்.
வேறு சிலரும் இதே
போல தன்னிச்சையாக நிதி
திரட்ட தனிப்பக்கத்தை அமைத்தைருந்தனர். அவை
எல்லாம் ஒன்றிணைக்கப்பட, முன்பின் தெரியாதவர்கள் எல்லாம், ராபர்ட்சன் பற்றி படித்து வியந்து அவருக்காக நிதி
அளிக்க முன்வந்தனர். இப்படி 4 ஆயிரம் பேருக்கு மேல்
டாலர்களை அள்ளிக்கொடுக்க முதல் நாள்
அன்றே ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல்
குவிந்துவிட்டது.
இத்தனைக்கும்
25,000 டாலர் தான் நிதி
திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பலரும் ராபர்ட்சனுக்கு தாராளமாக டாலர்களை வழங்கியதுடன், அவரது கடமை
உணர்வையும் மனம் திறந்து பாராட்டியிருந்தனர். கடின
உழைப்பிற்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும், மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கிறார் என்றும் பலரும் நெகிழந்து போய்
பாராட்டியுள்ளனர்.ஒரு சிலர் தங்கள் வசம்
இருக்கும் காரை கூட
நன்கொடையாக தரத்தயார் என்று கூறியிருந்தனர்.
நடை நடையாக நடப்பவரின் சுமை குறைப்பதற்கு இணையம் இணைந்து கார் வாங்கித்தர முற்பட்டு, இப்போது அவர் வாழ்நாள் முழுவதும் கவலை இல்லாமல் இருக்கும் அளவுக்கு நிதி அளித்திருக்கிறது. இணையம் இன்னொரு முறை நெகிழ்ந்து போய் நெகிழ் வைத்திருக்கிறது. ராபட்சனுக்காக நிதி திரட்ட அமைக்கப்பட்ட இணைய பக்கம்; http://www.gofundme.com/l7girc |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
16 Feb 2015
தினமும் 33 கி.மீ. நடந்து வேலைக்கு செல்பவர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment