ஃபேஸ்புக் மூலம் காதல் செய்து தன்னை ஒரு பெண் ஏமாற்றிவிட்டதாக சென்னை ஆணழகன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஆணழகனாக தேர்வு செய்யப்பட்ட கார்த்திகேயன், தற்போது உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், ஃபேஸ்புக் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்த அந்தப் பெண், அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எங்களது பழக்கத்தால் விரைவில் காதலிக்கத் தொடங்கினோம்
.
இந்நிலையில், அவருக்கு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், அங்கிருந்து இங்கு வந்து ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். அந்த பெண் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால், எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த பெண்ணைப் பிடித்திருந்தது.
ஆனால், அவளது வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என அந்தப் பெண் கூறியதால் நானும், அந்தப் பெண்ணும் போரூரில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டோம். அதன் பின்னர் நாங்கள் கணவர்-மனைவிபோல வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு, சொந்த ஊருக்குச் சென்ற அந்தப் பெண் அதன் பிறகு திரும்பி வரவில்லை. அவரை செல்போனில் கூட தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. திடீரென அண்மையில் தொடர்பு கொண்ட அந்தப் பெண், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும், என்னைப் பிடிக்கவில்லை என்றும் கூறிவிட்டார்.
உடனே நான் அவரைச் சந்திக்க அந்த பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்றபோது, அவரது குடும்பத்தினர் என்னை மிரட்டி அனுப்பிவிட்டனர். மேலும், என்னைக் காதலிப்பதாக கூறி அந்த பெண் பல லட்சம் ரூபாய் என்னிடம் மோசடி செய்துள்ளார். இப்போது, வேறு 3 இளைஞர்களையும் தனது வலையில் விழ வைப்பதற்காக அந்தப் பெண் முயற்சித்து வருகிறார். அதனால், அந்தப் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
போலீசார் இதுகுறித்து தற்போது விசாரணையில் இறங்கி உள்ளனர்.

No comments:
Post a Comment