சிறந்த படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது பேர்ட்மேன் படம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார் ஜே.கே.சிம்மன்ஸ். விப்ளாஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
87வது ஆஸ்கர் விருதில் சிறந்த படத்துக்கான விருதை பேர்ட்மேன் வென்றுள்ளது.
தி தியரி ஆப் எவ்ரிதிங் திரைப்படத்தில் நடித்த எடி ரெட்மேனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டில் அலைஸ் திரைப்படத்தில் நடித்த ஜூலியன் மூருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருதை அலெஜாண்ட்ரோ வென்றார். பேர்ட்மேன் திரைப்படத்தை இயக்கியததற்காக அலெஜாண்ட்ரோ விருதை பெற்றார்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை பாட்ரிகா அர்கியூட்டா பெற்றுள்ளார். 'பாய்ஹுட்" என்ற படத்தில் நடித்ததற்காக பாட்ரிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருதை பாட்ரிகா அர்கியூட்டா பெற்றுள்ளார். 'பாய்ஹுட்" என்ற படத்தில் நடித்ததற்காக பாட்ரிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருதை மிலேனா கேனனெரோ பெறுகிறார். தி கிராண்ட் புடாபெஸ்ட் ஓட்டல் படத்துக்காக ஆஸ்கர் விருது பெறுகிறார் மிலேனா. சிறந்த ஒப்பனை கலைஞருக்கான விருதை பிரான்சிஸ், மார்க் குலி பெறுகின்றனர்.
மேலும், சிறந்த படங்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. சிறந்த படங்களுக்கான பட்டியலில் அமெரிக்கன் ஸ்நிப்பர், தி இமிடேஷன் கேம், பேர்ட்மேன், செல்மா, பாய்வுட், தி தியரி ஆப் எவரிதிங், தி கிராண்ட் படாபெஸ்ட் ஹோட்டெல், விப்லாஷ், உள்ளிட்ட 8 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் பேர்ட் மேன் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் உட்பட 9 பரிந்துரைகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆச்கர் விருதை போலந்தின் 'இடா' என்ற படம் தட்டிச் சென்றது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அலெக்ஸாண்டர் தெப்லா வென்றார்! தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்தில் இசையமைத்ததற்காக அலெக்ஸாண்டருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment