சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Feb 2015

மனைவி நிறைமாத கர்ப்பிணி... தவித்த தோனிக்கு உதவிய 'அமித் ஷா'

லகக் கோப்பை போட்டி தொடங்கும் தருவாயில், இந்திய அணியின் கேப்டன் தோனியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்த தோனிக்கு இந்திய அணியின் யோகா மாஸ்டர் அமித் ஷா என்பவர்தான் மனதை கட்டுப்படுத்தும் மந்திரத்தை கற்றுக் கொடுத்துள்ளார். 
 

உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லும் நோக்குடன் இந்திய அணி, 4 மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா மண்ணுக்கு புறப்பட்டு விட்டது. நீண்ட காலம் தாய்நாட்டை பிரிந்து இருக்கும் வீரர்களை வீட்டு நினைவு வாட்டி விடக்கூடாது என்பதற்காக இந்திய அணியின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் ரொம்பவே மெனக்கெடுகின்றனர். 

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் தோனி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அவரது மனைவி சாக்‌ஷி இங்கே நிறைமாத கர்ப்பிணி. கேப்டன் தோனியின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் யோசித்து பார்த்தால் தந்தையாகப் போகும் எந்த ஆண் மகனும் விரும்பாத நிகழ்வு இது. குழந்தை பிறக்க போகும் சமயத்தில் எந்த ஆணும் மனைவியின் அருகில்தான் இருக்க விரும்புவார். ஆனால் தோனி விஷயத்தில் இது நடககவில்லை. 

எனினும் இந்த சூழ்நிலையை தோனி எப்படி சமாளித்தார்? அதற்கு உதவியாக இருந்தது இந்திய அணியின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள்தான். குறிப்பாக யோகா மாஸ்டர் அமித் ஷா, இந்த தருணத்தில் தோனிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அவர் மனதை இலகுவாக வைத்துக் கொள்ள உதவியாக இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் குழந்தை பிறந்த பின்னர் கூட தோனி இன்னும் வரை குழந்தையை பார்க்க தாய்நாட்டுக்கு வரவும் இல்லை. தோனி விரும்பியிருந்தால் ஒருநாளில் இந்தியா வந்து குழந்தையை நேரில் பார்த்து விட்டு திரும்பி விட முடியும். யோகா கொடுத்த தெம்பால் மனிதர் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 

தோனி மட்டுமல்ல அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் யோகா மாஸ்டர் அமித் ஷா, பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் மனநல மருத்துவர் வி.பி.சுதர்ஷனன் ஆகியோரின் ஆலோசனைகள், அறிவுரைகள் மிகுந்த உதவியாக இருந்துள்ளது. வீரர்களின் மனநிலையை கண்காணித்து அவர்களை ஹோம் சிக்கில் இருந்து விடுவிப்பதுதான் இவர்களது முக்கிய வேலையும் கூட.

இந்த உலகக் கோப்பையை பொறுத்த வரை ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு 10 சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் உள்ளனர். இந்தியாவுக்கு 15 சப்போர்ட்டிங்  ஸ்டாஃப்கள் இருக்கின்றனர். ஆக மைதானத்தில்  11 ஜோடி கால்கள்  வெற்றி பெற களத்திற்கு வெளியே 15 பேர் கொண்ட குழு தன்னை மறந்து உழைத்து கொண்டிருக்கிறது. அவர்கள் யார்? யார்?

அணி இயக்குநர் -ரவி சாஸ்திரி

தலைமை பயிற்சியாளர்- டங்கன் ஃபிளட்சர்

அணி மேலாளர்- அர்ஷத் ஆயூப்

துணை பயிற்சியாளர் -சஞ்சய் பாங்கர்

பீல்டிங் பயிற்சியாளர்- ஸ்ரீதர்

பந்துவீச்சு பயிற்சியாளர்- பாரத் அருண்
 
பிசியோதெரபிஸ்ட்- நிதின் படேல்
 
மனநிலை மருத்துவர்- வி.பி. சுதர்சனன் 
 
துணை உதவியாளர்-ரகு ஸ்ரீநிவாசன்
 

வீடியோ அனாலிஸ்ட்-சந்தீப் ஆனந்த்
 
உடல் மசாஜ் நிபுணர்-ரமேஷ் மானே
 
யோகா மாஸ்டர்- அமீத் ஷா
 
லாஜிஸ்டிக் மேலாளர் - சதீஷ்
 
மீடியா மேலாளர்- டி.ஆர். பாபா
 
பாதுகாப்பு அலுவலர்- டக் லியோன்ஸ்


No comments:

Post a Comment