சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Feb 2015

இஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை: சொல்கிறார் ஒபாமா!

இஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை. இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்துகிறவர்கள் மீதுதான் போர் தொடுத்திருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி உள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல் தொடர்பான 3 நாள் உச்சிமாநாடு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசும்போது, ''நாங்கள் இஸ்லாமுக்கு எதிராக போரிடவில்லை. இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்துகிறவர்கள் மீதுதான் போர் தொடுத்திருக்கிறோம்.

ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்-கொய்தா தீவிரவாதிகள் போன்ற பிற தீவிரவாதிகள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து செயல்படுகின்றனர். இவர்கள், தங்களை மதத்தலைவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். புனிதப் போராளிகளாகவும் காட்டிக்கொள்கிறார்கள். அப்படித்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களை இஸ்லாமிய அரசு என அறிவிக்கிறார்கள்.


அவர்கள், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமுக்கு எதிராக போரிடுவதாக தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அப்படித்தான் அவர்கள் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள். இளைஞர்களை, தீவிரவாதிகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இஸ்லாமும், மேற்கத்திய நாடுகளும் மோதிக்கொள்வதாக அல்லது நவீன வாழ்வும், இஸ்லாமும் மோதிக்கொள்வதாக இவர்கள் செய்கிற பிரசாரத்தை நிராகரிக்க வேண்டும்.

அவர்கள் விரும்புகிற சட்டப்பூர்வ உரிமையை நாம் ஒருபோதும் வழங்க கூடாது. அவர்கள் மதத்தலைவர்கள் அல்ல, தீவிரவாதிகள். இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஒரு பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். ஐ.எஸ். தீவிரவாதிகளும் சரி, அல்-கொய்தா தீவிரவாதிகளும் சரி இஸ்லாமிய புனித நூலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

வன்முறை, தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கடவுளின் பெயரை சொல்லிக் கொண்டு, அப்பாவி மக்களை கொல்கிறார்கள். அவர்கள், இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம், யூத மதம், இந்து மதம் என எந்தவொரு மதத்தின் பிரதிநிதிகளும் அல்ல.

தீவிரவாதத்துக்கு எந்தவொரு மதமும் பொறுப்பு ஏற்கவில்லை. வன்முறைக்கும், தீவிரவாதத்துக்கும் மனிதர்கள்தான் பொறுப்பு. வன்முறை, தீவிரவாதத்துக்கு எதிராக படை பலத்தை மட்டுமே கொண்டு போரிட்டு வெற்றி பெற்றுவிட முடியாது. சமூகங்களும் இதில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்" என்றார்.



No comments:

Post a Comment