சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2015

வீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா?

டேய் மச்சான் உனக்கு வீடியோ வந்துச்சா..?’ - இன்றைய தேதிக்கு இளசுகள் பலரும் கேட்கும் கேள்வி இதுதான். முன்பெல்லாம் ஆபாச வீடியோக்களை மறைமுகமாக, ப்ரௌசிங் சென்டரிலோ அல்லது கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் உள்ள தங்களது கம்ப்யூட்டரின் மூலமாகவோ யாரும் இல்லாத போது பார்ப்பார்கள். இப்போது நிலைமை வேறு. டெக்னாலஜி வளர்ச்சி என உலகமே சுருங்கி பாக்கெட்டில் மொபைலாக மாறிவிட்டது.
சாதாரண மனிதன் துவங்கி அசாதாரண மனிதன் வரை ஆண்ட்ராய்டு போன் இப்போது எல்லா மக்களிடமும் உள்ளது. இந்நிலையில் வாட்ஸப் , முகநூல் என அனைத்தும் இப்போது கையில். ஆபாச வீடியோக்களை, தேடி சென்று பார்த்த காலம் போய் இப்போது கொஞ்சம் நவீனத்துவமாக நம் கையிலேயே கிடைத்து விடுகிறது. இது தவறு என நினைத்து ஒதுக்கினால் கூட, வாட்ஸப்பில் வம்படியாக வந்து வவிழுகின்றன.

அப்படித்தான் சமீபகாலமாக ஹீரோயின்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது மார்ஃபிங்கா, இல்லை உண்மையான வீடியோக்களா என சிந்திப்பதற்கு முன்பு, அவர்கள் ஹீரோயின்கள் என்பதால் அது அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையில் இது பொதுவாக பெண்கள் சார்ந்த ஒரு அபாயம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் எத்தனையோ பெண்கள், எத்தனையோ முறையில் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் தினமும் லட்சங்களில் பரிமாறப்படுவது உங்களுக்கு தெரியுமா?

இது உண்மை எனில்... இந்த வீடியோக்கள் எப்படி உருவாகியிருக்கும்?


தனிமை. தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விஷயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது டெக்னாலஜி வளர்ச்சியால்   செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அதை அழிக்காமல் நம் மொபைல்தானே என நினைத்து அப்படியே விட்டுவிட்டால், நம் மொபைலுக்குள் ஆக்கிரமித்து இருக்கும் அப்ளிகேஷன்களே அவ்வீடியோக்களை தற்காலிக சர்வருடன் இணைத்து விடும். கை தவறி போகலாம். அல்லது மொபைல் ரிப்பேர், யூஎஸ்பி கனெக்ஷன் என பல வழிகள் உள்ளன பரவுவதற்கு. மேலும் நாம் அழித்துவிட்ட இதுபோன்ற பைல்களும் மேற்கூறிய வழிகளில் பரவுவதற்கான ஆபத்து உள்ளது.

இன்னொருபுறம், நமக்கு நெருங்கிய வீட்டில் உள்ள வேலையாட்கள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ படம் பிடிக்கப்பட வாய்ப்புகளும் உள்ளன. மேலும் பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் , காதல் என்ற பெயரிலும் இப்போதெல்லாம் ஆண் , பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள துவங்கிவிட்ட நிலையில் அப்படியும் போகலாம்.

பொய்யெனில் எப்படி உருவாகியிருக்கும்?


நாம் எடுக்கும் சாதாரண செல்ஃபி மற்றும் செல்ஃபி வீடியோக்கள்தான் காரணம். நம் முகத்தை வேறு ஒரு பெண்ணின் உடலில் அப்பட்டமாக நாம் போன்றே மார்பிங் செய்ய முடியும் . எனவேதான் பெண்கள் தங்களது செல்ஃபிக்கள், போட்டோக்களை முடிந்தவரை சமூக வலை தளங்களில் தவிர்த்து விடுங்கள் என பல சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

இதில் பெண்கள் மட்டும்தான் பாதிப்படைகின்றனரா?

இல்லை. ஆண்களுக்கு வேறு விதமாக. சில ஆண்களுக்கு ஆபாச வீடியோக்கள், சைட்டுகள் என்றாலேஎன்னவென்று தெரியாமல் இருக்கும். ஆனால் அவ்விடத்தில் நண்பர்கள் மூலமாக நல்லவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நம் முந்தைய தலைமுறைக்கு இந்த டெக்னாலஜிகள் மிகவும் புதிது. என்பதால் அவர்களுக்கு தன் பிள்ளைகள் இப்படி ஒரு புது விதத்தில் பாதிக்கப்பட்டு வருகிறான் என்பது அறிய வாய்ப்புகள் குறைவு. இது போன்ற விஷயங்களில் சமீபகாலமாக டீன் ஏஜ் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு சர்வே சொல்கிறது.

சஞ்சனாசிங்


இதைபற்றி ’ரேனிகுண்டா’, ‘மீகாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சனா சிங், ஒரு சந்திப்பில் மிகவும் வருத்தத்துடன் தனது எண்ணத்தை பகிர்ந்துள்ளார். "அப்படி ஒரு வீடியோவை சித்தரிக்கும் போது, அதனை செய்பவர் முதலில் அவரது அக்கா, தங்கை, மனைவியை நினைத்து பாருங்கள். நடிகையாக இருப்பது மிகவும் கடினம். எவ்வளவோ கஷ்டப்பட்டு நாங்கள் எங்கள் பெயரை தக்க வைத்துக்கொள்கிறோம். அப்படி இருக்கையில் ஓரிரு நிமிட வீடியோக்களில் எங்களது மொத்த பெயரையும் கெடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் உங்கள் குடும்ப பெண்களை நினைத்து பாருங்கள்" என கூறியுள்ளார்.

உண்மையும் அதுவே, அடுத்தவர்களின் புகைப்படம், வீடியோ என நாம் உருவாக்கும் அதேவேளையில் நம்மை சேர்ந்தவர்களுக்கு, ஏன் நமக்கும் கூட இதே நிலை உருவாகும் என்பதை சிந்தித்தால் சமுதாயம் தப்பிக்கும். இதில் சிக்கியுள்ளது முக்கியமாக இளைஞர்கள்தான். பெருகிவிட்ட டெக்னாலஜியை நல்ல விஷயங்களை பரப்ப பயன்படுத்தலாமே. யோசியுங்கள்



No comments:

Post a Comment