சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2015

110 எல்லாமே III - தான்!

தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க வெளியிட்டு வருகிறது. தமிழக அரசின் நிதி நெருக்கடி, இலவசத் திட்டங்கள், நிதி வீணடிப்பு போன்ற பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு ராமதாஸ் பதிலளித்தார்.
''தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?''
''ஊழலும் நிர்வாகத் திறமையின்மையும்​தான் காரணம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முறைகேடும் நிர்வாகத் திறமையின்மையும் செயல்படுவதில் காலதாமதமும் பல மடங்கு பெருகிவிட்டன!'

''பொதுத் துறை நிறுவனங்களின் கடன் சுமையைச் சேர்த்தால், அரசின் கடன் ரூ.4 லட்சம் கோடியை தாண்டப் போகிறது. இது எங்கே போய் முடியும்?''
''தமிழ்நாடு மிகவும் ஆபத்தான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய நிலையில், தமிழக அரசின் நேரடிக் கடன்  ரூ.1,78,170 கோடி. 2015-16-ம் ஆண்டில் வாங்கவிருக்கும் கடன் ரூ.28,578 கோடி. ஆக, தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.2,06,748 கோடியாக அதிகரிக்கும். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 18.91 சதவிகிதம்தான் என்றும், 25 சதவிகிதம் வரை கடன் வாங்க விதிகளில் வகை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் சொல்லப்படலாம். ஆனால், தமிழக அரசுக்கு சொந்தமான மின்வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி கடன் உள்ளது. இதையும் சேர்த்தால் தமிழக அரசின் கடன் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கும். குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளின் நேரடிக் கடன் தமிழகத்தைவிட அதிகம்தான். ஆனால், அங்குள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கடன் அதிகமாக இல்லை. ஒட்டுமொத்தக் கடன் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவிலேயே அதிக கடன் சுமையுள்ள மாநிலமாக தமிழகம்தான் இருக்கும். இந்தக் கடனுக்காக அரசும், பொதுத் துறை நிறுவனங்களும் செலுத்தும் வட்டி மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.32,000 கோடி. மத்திய அரசு தரும் மானியங்கள் இல்லாமல் தமிழக அரசின் ஆண்டு வருவாய் ரூ.99,918 கோடி மட்டும்தான். இதில் மூன்றில் ஒரு பங்கை வட்டிக்காக மட்டுமே கட்டுகிறார்கள். கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்காகப் புதிதாகக் கடன் வாங்குகிறார்கள். இதே நிலை நீடித்தால், தமிழகத்தின் பொருளாதார நிலை என்னவாகும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.''
''இலவசத் திட்டங்களுக்கு அரசின் நிதி வீணடிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?'
''இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால், அத்தகைய திட்டங்கள் பயனுள்ளவையாகவும், எதிர்காலத்தில் பயன்தரக்கூடியவையாகவும் (றிக்ஷீஷீபீuநீtவீஸ்மீ) இருக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்விக்காக அரசாங்கத்தால் செலவு செய்யப்படும் பட்சத்தில் அந்த மாணவன் படித்துவிட்டுப் பணிக்குச் செல்லும்போது சமூகத்துக்குப் பயன் கிடைக்கும். மனித வளம், சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான இலவசங்களை அரசு வழங்கினால், இப்போது வழங்கப்படும் இலவசங்களின் மதிப்பைவிட பல மடங்கு மதிப்புள்ள பொருட்களை தாங்களாகவே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு மக்களின் பொருளாதார நிலை மேம்படும். ஆனால், அப்படிச் செலவு செய்யப்படும் தொகை முறைப்படி செய்யப்பட வேண்டும் என்பதும் அதில் முறைகேடு கூடாது என்பதும் என்னுடைய கருத்து.''
''தொடர்ந்து 'மாதிரி பட்ஜெட்’ தாக்கல் செய்பவர்கள் நீங்கள். நிதி நிலைமை​யைச் சீரமைக்க அரசுக்கு உங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் எவை?''
''தமிழ்நாட்டில் மின்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி மின் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டாலே தமிழகத்தின் உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரித்து அரசின் வருவாய் உயரும். சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கினால் தொழில் வளம் பெருகும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், ஆட்சியாளர்களுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியிருக்கும் என தொழிலதிபர்கள் அஞ்சும் நிலை மாற்றப்பட வேண்டும். பாசன வசதிகளை அதிகரித்து வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க முடியும். சிறப்பான நிர்வாகம் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைத்து நிதி நிலைமையை மேம்படுத்த முடியும்.''
''டாஸ்மாக் வருவாயில் காட்டும் அக்கறை, மற்ற துறைகளில் இல்லாமல் போனதாகச் சொல்லப்படுகிறதே?''
''மது விற்பனை மூலம் அதிக வருவாயை எளிதாக ஈட்டலாம் என்பதால், டாஸ்மாக் வருவாயில் மட்டும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க மேலிடத்துக்கும் அ.தி.மு.க மேலிடத்துக்கும் நெருக்கமான பலர் மது ஆலைகளை நடத்தி வருவதும் இதற்கு இன்னொரு காரணம். புதுமையான திட்டங்களை வகுத்து வேளாண் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகுத்தால்தான் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.''
''வணிக வரியும் பத்திரப் பதிவும் அரசின் முக்கிய வருவாய் கேந்திரங்கள். ஆனால், அங்கே வரி வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே?''
''அப்படிச் சொல்ல முடியாது. நடப்பு ஆண்டில் வணிகவரி மூலம் ரூ. 68,724 கோடி வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனையின் மூலம் கிடைக்கிறது என்பதுதான் கவலையளிக்கும் உண்மையாகும். தமிழக அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.25,000 கோடி அளவுக்குக் கூடுதலாக வணிகவரி வசூலிக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் வணிகவரித் துறையில் நடைபெறும் ஊழல்களால் வணிகவரி வருவாயை அதிகரிக்க முடியவில்லை. அதேபோல் பத்திரப்பதிவு கட்டணமும், வழிகாட்டி மதிப்புகளும் அதிகமாக இருப்பதால் வணிக நோக்குடன் சொத்துகளை வாங்கும் பலரும் அதை பதிவு செய்யாமல் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் விற்பனை செய்கிறார்கள். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு தீர்வைகளை குறைத்து நடைமுறையை எளிமைப்படுத்தினால் வருவாயை அதிகரிக்க முடியும்.''
''கடுமையான நிதி நெருக்கடியான சூழலில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் பட்ஜெட் அறிவிப்புகளும் நிறைவேற்ற சாத்தியம் உண்டா?''
''பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும் போதிலும், அவற்றுக்குத் தேவையான நிதி முழுமையாக ஒதுக்கப்படுவதில்லை. இதனால், பல பட்ஜெட் அறிவிப்புகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 2 சதவிகிதம்கூட நிறைவேற்றப்படவில்லை. 110 விதியின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ.1,27,501 கோடி ஆகும். இது கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மதிப்புக்கு இணையானதாகும். இவை எல்லாம் அ.தி.மு.க ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்றப்படுவதற்கு சாத்தியமே இல்லை. உண்மையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குப் போடப்பட்ட 111தான்.''
''பால், பஸ், மின்சார கட்டண உயர்வுகள் எல்லாம் நிதி நெருக்கடியான சூழலில் தவிர்க்க முடியாதுதானே?''
''பால் விலையைப் பொறுத்தவரை பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியிருப்பதால், விற்பனை விலையை ஓரளவு உயர்த்துவதில் தவறு இல்லை. ஆனால், இந்த விலை உயர்வு மக்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகளில் பால் விலை 100 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது. பேருந்து, மின் கட்டணம் உயர்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நிலவும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டால்தான் ஏற்படுகிறது.  இதை மக்கள் தலையில் சுமத்துவது எப்படி நியாயம் ஆகும்?''
''பட்ஜெட்டுக்கு முன் நிழல் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வரும் பா.ம.கவின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா? இந்த ஆண்டு நிழல் நிதிநிலை அறிக்கையில் முக்கியமாக எதை வலியுறுத்தப் போகிறீர்கள்?''
''எங்களின் நிழல் நிதி அறிக்கைகளைப் பொருளாதார வல்லுநர்களும் தமிழக அரசு அதிகாரிகளும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள். எங்களின் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல அம்சங்களை அப்படியே எடுத்து அரசு நிதிநிலை அறிக்கையில் சேர்த்திருக்கிறார்கள்'' என்றார் ராமதாஸ்.
தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, கடன் சுமையின் தள்ளாட்டம் என தமிழக அரசு சிக்கித் தவிப்பது ஒருபுறம்..! மறுபுறம்... தமிழகத்தில் தொழில் துறை 'சுபிட்சமாக’ இருக்கிறது என்கிறார்கள், ஆட்சியாளர்கள்...                                            
அது, அடுத்த இதழில்...

பெருகும் தொழிற்சாலைகள்... உருகும் தொழிலாளிகள்!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிக்கிறது, பெரும்புதூர். 'இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று குறிப்பிடும் அளவுக்கு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி இது. 1996-ல் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வருகைக்குப் பிறகு, ஏராளமான பன்னாட்டு கம்பெனிகள் இங்கு படையெடுக்கத் தொடங்கின.

ஹூண்டாய் கம்பெனியில் தொழிற்சங்கம் வைப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். வரி விவகாரத்தில் சிக்கிய நோக்கியா நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூடுவிழாவுக்குத் தயாராகிவிட்டது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இந்தப் பிரச்னைகள் தொடர்பாக, சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணனிடம் பேசினோம். 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு முன்பாக, சுமார் ஐந்தரை லட்சம் ஹெக்டேர் அளவில் அங்கு விவசாயம் நடந்துள்ளது. தற்போது 55,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மட்டுமே உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் அரசு நிலம் வழங்கியது. மேலும், சொற்ப தொகைக்குத் தங்கள் நிலங்களை விவசாயிகள் விற்றனர்.
நோக்கியா ஆலைக்கு மட்டும் 211 ஏக்கர் கொடுக்கப்பட்டது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஏராளமான சலுகைகளை அரசு அளித்துள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆலைக்குத் தேவையான துணை மின்நிலையத்தை சொந்த செலவில் மின்வாரியமே அமைத்துக் கொடுத்தது.
ஸ்ரீபெரும்புதூரில் 800க்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பால், உணவு, குடிநீர் போன்ற பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் (Public utility services) என்ற வரையறைக்குள் கொண்டுவந்துள்ளனர். அப்படி என்றால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது. தி.மு.க., அ.தி.மு.க  ஆகிய இரண்டு அரசுகளும்தான் இதற்குக் காரணம்' என்றார் அவர்.
நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை தரப்படும் என்று கம்பெனிகள் வாக்குறுதி அளித்தன. ஆனால், நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், அடிமட்ட வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலத்தின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய். எனவே தற்போது அங்கு, ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.



No comments:

Post a Comment