சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Feb 2015

உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!

கொஞ்ச நாளுக்கு முன்னால...ஷாப்பிங் போவதற்காக அந்த கடைக்கு முன்னால நிறுத்திட்டு உள்ளே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணோம்ங்க!" என காணாமல் போன வண்டியை தேடி அலைந்து கிடைக்காததால் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு புலம்பி நிற்பவர்கள் ஏராளம். அப்படியான புலம்பல்கள் சமீபகாலமாக திருச்சியில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம்  திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகம்.

"கஷ்டப்பட்டு, அங்க இங்க கடன் வாங்கி பணம் சேர்த்து ஆசையாய் வாங்கின பைக்கை ஐந்து நிமிசத்துல பாவி பய ஆட்டையை போட்டுட்டான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான்!" என சாபமிடுகிறார் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராஜு.

திருடிய பைக்குகளில் ஷோரூம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை, ஒரு இளைஞர் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்ட பைக்கின் உரிமையாளர் அந்த நபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்  திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள  தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பது தெரியவந்தது. இந்த தங்கதுரை, திருச்சியில்  சமீபகாலமாக  காணாமல் போன  ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் உறையூர் நெசவாளர் காலனியிலுள்ள ஒரு வீட்டிலும், தா.பேட்டையில் ஷெட்  போட்டு  திருட்டு வாகனங்களுக்கு, போலி சான்றிதழ் தயாரிப்பதுடன், லாவகமாக வண்டி பதிவு எண்ணையும் மாற்றி, அந்த ஏரியாவில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீஸார், தங்கதுரை திருடிய 50–க்கும் மேற்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ், பேசன் புரோ உள்ளிட்ட விதவிதமான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கதுரை வண்டி எண் மாற்றி விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இது இப்படியிருக்க... போலீஸார் காணாமல் போன வண்டிகளை கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் அருகே குவிந்து தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர். சிலர், "வண்டியின் நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்க...வண்டி என்னுடையது... வீலை மட்டும் மாத்திட்டாங்க... இன்ஜினை மாத்திட்டாங்க... என்  வண்டி கிடைக்கலைங்க..!" என புலம்பி நின்றார்கள்.

இப்படி பைக்கை தேடி வந்தவர்களில் சிலர், தங்களது பைக்குகள் இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்.

பைக் கிடைத்த சந்தோசத்தில் இருந்த திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்த முஷ்தாக் உசேன் நம்மிடம், "கடந்த 10 வருஷமா திருச்சி ஹெட் போஸ்டாபிஸ்ல தலைமை முகவராக இருக்கேங்க. ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல போஸ்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு அரை மணிநேரம் கழிச்சி வந்து பார்த்தப்போ வண்டியை காணோம்; தேடி அலைந்தேன்.. காணல. இதோ இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அடுத்து நானே பல இடங்களில் தேடி அலைந்தேன். இப்போ கிடைச்சிருக்கு. என்னைப்போல சிலருக்கும் காணாமல் போன பைக் கிடைச்சிருக்கு. அதில் சிலருக்கு பைக்கையே டோட்டலா மாற்றியிருக்கிறான்.

எங்க பைக்கை எல்லாம் திருடி கொண்டுபோய் ஷோரூம் நடத்தியதாகவும், பகல் நேரங்களில் அந்த திருடன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி திருடியிருக்கிறான். அவன் திருடிய பைக் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டாதான். ஏன்னா அந்த பைக்கில்தான் எந்த சாவியை போட்டாலும் திறக்கும்னு  சொல்லியிருக்கிறான். தயவு செய்து  பைக்கை ரோட்டில் விட்டுட்டு கடைக்குள் போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்" என்றார் பாவமாக..

இன்னும் சிலரோ, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு சைடு லாக் போட்டிருந்தேன், காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வண்டி மட்டும் இருந்துச்சு இரண்டு வீலையும் காணல என்றனர்.

இதேபோல் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில்  வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் நாகராஜ். இவரது கடையில் வேலைக்காக லாரி ஒன்றை நிறுத்தியிருந்தாராம். வழக்கம்போல அன்று இரவு கடையை  மூடிவிட்டு சென்ற நாகராஜ், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பதறிய நாகராஜ், காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்து குற்றவாளிகளை கைது செய்தபாடில்லை.

ஆசை ஆசையாய் வாகனங்களை வாங்கினால் மட்டும்போதாது, அதை பத்திரமாக வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்! 



No comments:

Post a Comment