சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

ஶ்ரீரங்கம்: பிரியாணி க்ளைமாக்ஸ்!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெருகமணி எனும் ஊரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்குபேரும்  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக  ஒரு வீட்டில் பதுங்கியிருந்ததாகவும், அவர்கள்  வைத்திருந்த  பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி தயார் செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தகவல் கிடைத்து சம்பந்தப்பட்டவர்கள் எஸ்கேப் ஆகிவிட, இனாம்குளத்தூர் காவல்துறையினர் பிரியாணியை கைப்பற்றினர். பிரியாணியை தயாரித்த அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
பணப்பட்டுவாடா, பிரியாணி தயாரிப்பு என  வாக்காளர்களை வளைக்கும் வேலைகள் இன்றும் தொடர்ந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சாவடிகளுக்கு பார்வை இடுவதுபோல் சென்று வாக்காளர்களிடம்  வாக்கு கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்குப்பதிவை அதிமுக வேட்பாளர் வளர்மதி பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடிக்கு  வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்களிடம்  கையெடுத்து கும்பிட்டதாகவும், அதை பார்த்த தி.மு.க.வினர்,  அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வாக்குப்பதிவு இடத்தில் வாக்கு சேகரிக்கிறார் என குற்றம்சாட்டினார்கள். இந்த பரபரப்புகளுக்கு நடுவிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

"தேர்தலை நேர்மையாக நடத்த முயற்சி செய்தாலும் குறுக்கு வழியில் வாக்காளர்களை வளைக்கும் செயல்களை அரசியல் கட்சிகள் மாற்றிக்கொள்ள மறுக்கிறார்களே..!" என புலம்பி தீர்த்தார்கள் தேர்தல் அதிகாரிகள். 



No comments:

Post a Comment