சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

போலி பத்திரத்தை அறிந்து கொள்வது எப்படி?

நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம், பட்டா, சிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும். மேலும் அந்த பத்திரம் உண்மையான பத்திரம் தானா என அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாதே போலி பத்திரங்களை கண்டுபிடிப்பது எளிது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதே போலியை புரிந்து கொள்ளலாம்.

போலி பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் சரியாக இருந்தாலும், முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின் பக்கம் குறிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களைக் கொண்டு எளிதில் அடையாளம் காண முடியும். சொத்தின் உரிமையாளர் அல்லாத ஒருவரால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட தயாரிக்கப்பட்ட போலி பத்திரத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். போலியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், நாம் நகல் பெறும் போதும் அதன் பிரதிதான் கிடைக்கும் இருப்பினும் சொத்தின் மூலப்பத்திரங்களைப் (தாய் பத்திரம்) பார்த்தால் ஓரளவு கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக சொத்தின் உரிமையாளர்களிடம் சம்பந்தப்பட்ட தாய் பத்திரங்களின் ஒரிஜினல் அனைத்தும் இருக்கும். அதை சொத்து விற்பவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தற்போதைய முறைப்படி, பதிவின்போது சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அடையாள அட்டை கொண்டு நபர்களை உறுதி செய்கிறார்கள். ஆனால், சொத்தின் உண்மையான உரிமையாளர் இவர் தான் என்பதை உறுதி செய்த பிறகே பதிவு செய்யலாம். என்ற முறை அமலுக்கு வந்தால் தான் போலி பத்திரங்கள் மூலம் பதிவு செய்வதை தடுக்க முடியும். சொத்து விற்கும் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தில், அவர் தான் சொத்தின் உரிமையாளர் என்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும்.
அவர் சொத்து வாங்கிய கிரயப்பத்திரத்தின் ஒரிஜினல் மற்றும் வருவாய்த்துறையினரால் கொடுக்கப்படும் பட்டா ஆகியவற்றை சரிபார்த்த பிறகே, சார்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். அதோடு, இப்போது வழங்கப்படும் கம்ப்யூட்டர் பட்டாக்களில் சொத்தின் உரிமையாளரின் புகைப்படம் சேர்க்கப்படுவதில்லை. புகைப்படத்துடன் கூடிய பட்டாக்கள் வந்தால் போலி பத்திரம் மோசடிகளை தவிர்ப்பது இன்னும் எளிது.



No comments:

Post a Comment