சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Feb 2015

வேண்டுதலா...ஆதாயமா?

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மையமாக வைத்து நடக்கும் 'ஆன்மீக வேண்டுதல்கள்' பிரபலங்களின் பிரார்த்தனைகளை பார்க்கும்போது இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு உடன்பாடனதா அல்லது தெரிந்தேதான் இவற்றை அனுமதிக்கிறாரா? என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியவில்லை.  
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா போராடி ஜாமீன் பெற்று  தற்போது போயஸ் கார்டன் வீட்டில் இருக்கிறார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், அவரும் அவரோடு தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்து அதன் மீதான விசாரணையும் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் நாள் தோறும் கோவில்களில் வேண்டுதல்கள் செய்தும்,  பால்குடம் ஏந்தியும், தீச்சட்டி தூக்கியும் ,அலகு குத்திக் கொண்டும் விரதம் இருந்தும் சபரிமலை சென்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இவர்களை எல்லாம் 'கராத்தே ஹூசைனி' மிஞ்சி விட்டார். ஜெயலலிதாவுக்கு உண்மை விசுவாசிகள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களை விட தன்னை `விசுவாசிக்கும்` மேலாக காட்டிக் கொண்டுவிட்டார் ஹூசைனி. சென்னையில் உள்ள அவரின் வீட்டில் தனது மாணவர்களின் உதவியால் சிலுவை செய்து அதில் தன்னைத்தானே கை மற்றும் கால்களில் ஆணியை அடித்துக் கொண்டு  சிலுவையில் தொங்கியுள்ளார். 6 நிமிடங்களுக்கும் மேலாக தன்னை அப்படியே ஆணி அடித்த நிலையில் வருத்தி கொண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டு முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்று பிரார்த்தனை உரையும் நிகழ்த்தி இருக்கிறார்.  
இது போன்ற நிகழ்வுகள் ஜெயலலிதாவுக்காக தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இவை பற்றி அவர் எந்தக் கருத்தும் சொல்வதில்லை. அவர் இதற்கு மறைமுகமாக உடன்படுகிறார் என்றுதானே பொருள் ஆகிறது.கோவில்கள் முன்னே வேண்டுதல்கள் நடப்பது வேறு வகையாக எடுத்துக் கொண்டாலும் சிலுவையில் அறைந்து கொள்வது எந்தவகையில் ஏற்புடையதாகும் என்று தெரியவில்லை.
அதிமுகவை பொறுத்தவரை மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக செயல்பட்டவர்களுக்கு பதவியும், பரிசும் நிச்சயம் என்பதாலேயே மற்றவர்களும், மேலிடத்தின் கவனத்தை ஈர்க்க இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று எண்ண தோன்றுகிறது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி  குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் `ஆதாரங்களை சமர்பிக்காமலேயே வாதிட்டு வருகிறீர்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்` என்று குட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்காக நடத்தப்படும் இதுபோன்ற வேண்டுதல்கள் எத்தகைய நோக்கத்தில் நடத்தப்படுகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!


No comments:

Post a Comment