மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்றால், யூக்லிப்டஸ் ஆயில் என்ற நீலகிரி தைலத்தை மறக்காமல் வாங்கி வரச் சொல்லுவோம். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மருத்துவ மூலிகை எண்ணெய் இது. ஒரு சொட்டு உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும். சளியையும், தும்மலையும் தூரவிரட்டும்.
வெளி நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் இந்த நீலகிரி தைலம், தோல் மற்றும் அழகு பராமரிப்புக்காக அதிகம் பயன்படுவதுடன், கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்புகளை குணமாக்குவதுடன் தோல் எரிச்சல், பூச்சிக் கடி, தலைவலிக்கும் அருமருந்தாக இருக்கிறது. தலைவலி வந்தால் மாத்திரைகளை விழுங்குவதைக் காட்டிலும், நீலகிரி தைலம் உடனடியாக நிவாரணத்தை தருவதுடன், எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் இருக்கிறது. வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு யூக்லிப்டஸ் ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. கொதிக்கும் நீரில் சிறிது நீலகிரி தைலத்தைப் போட்டு ஆவிப் பிடிக்கலாம். சுடுநீரில் இரண்டு சொட்டு நீலகிரி தைலத்தை ஊற்றி பருகினால் ரத்த சோகை, உடல் அலர்ஜி போன்றப் பிரச்னைகளும் கட்டுப்படும். உடல் வலி, தசை வலி இருக்கும் இடங்களில் நீலகிரி தைலத்தைத் தடவி, மசாஜ் செய்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காய்ச்சலின் போது நம் உடலில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இந்த தருணத்தில், யூக்லிப்டஸ் தைலத்தை உடல் முழுவதும் தேய்ப்பதால் உடல் வெப்பம் தணிந்து காய்ச்சல் குணமடையும். இதனால் தான் நீலகிரி தைலத்தை, 'காய்ச்சல் எண்ணெய்' என்ற இன்னொரு பெயரிலும் அழைக்கின்றனர்.
தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி, உடல் வலி போன்ற அனைத்து பாதிப்புக்கும் நீலகிரி தைலத்தை பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment