சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2015

அடுத்த 'சிக்ஸ் பேக்' ஹீரோ அஜித்!

ஹாலிவுட், பாலிவுட் போன்று, தமிழ் சினிமாவிலும் 'சிக்ஸ் பேக்' தாக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் அவதார ஆசை நடிகர் அஜித்திற்கு வந்துள்ளது.
பொதுவாக சிக்ஸ்பேக் கொண்டு வர மும்பை நியூயார்க் போன்ற நகரங்களில் இருந்து ஸ்பெஷலிஸ்ட்களை அழைத்து வருவார்கள் நம்மூர் ஹீரோக்கள். சிக்ஸ்பேக் கொண்டு வருவது என முடிவெடுத்துவிட்டால் ஹீரோக்களும் முதலில் தொடர்பு கொள்வது சிக்ஸ் பேக் ஸ்பெஷலிஸ்ட் ஷிவ குமாரைதான்.


தமிழ் சினிமா சிக்ஸ் பேக் ஹீரோக்கள் முக்கால்வாசி பேருக்கு, ஸ்பெஷல் கோச்சர் இவர்தான். சிக்ஸ்பேக் பயிற்சி சீக்ரட் பற்றிக் கேட்டதும், வார்த்தைகளில் உற்சாகம் தெறிக்க பேசினார் ஷிவ குமார்.

''மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு வொர்க் அவுட் பண்ணிட்டே, சினிமால சான்ஸ் தேடிட்டு இருந்தேன். அப்ப, 'துரை' படத்துல அடியாளா நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. சந்தோஷமா போனா, 25-வது ஆளா என்னை ஓரமா நிக்க வெச்சுட்டாங்க. அந்தப் படத்தோட ஹீரோ அர்ஜூன் சார். எல்லா ஜூனியர் ஆர்டிஸ்ட்டையும் ஒரு எட்டு பார்க்கணும்னு வந்தவர் என் உடம்பை பார்த்துட்டு ரொம்ப இம்பரஸ் ஆகிட்டார். அடுத்த நாளே போன் பண்ணி 'புது ட்ரெயினர் கூட வொர்க் பண்ணனும்னு எனக்கு ஆசை. நீ என்னை ட்ரெயின் பண்ணு'னு சொன்னவர்,  'இந்தப் படத்துக்காக நான் சிக்ஸ் பேக் போட போறேன் அதுக்கு ஏத்த மாதிரி வொர்க் அவுட் சொல்லு' னு ஆச்சரியப்படுத்தினார்.

தினமும் இரண்டு பேர், மூணு மணி நேரம் கடுமையான பயிற்சி பண்ண ஆரம்பிச்சோம். தொன்னூறு நாள்லேயே, சிக்ஸ் பேக் கொண்டு வந்துட்டேன். அதுல, அவருக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, அதுக்குப் பிறகு எனக்குப் பெருசா வாய்ப்பு வரலை. சோர்ந்து இருக்கிறப்பல்லாம், அர்ஜூன் சார், "ஒருநாள் உன் பின்னாடி பணம், புகழ் எல்லாம் தேடி வரும். அப்ப நீ அதைப் பார்த்து ஓடுவ"னு சொல்லிட்டே இருப்பார். இப்ப நடிச்ச ஜெய்ஹிந்த்-2 படம் வரை நான்தான் அவருக்குப் பயிற்சியாளர். எனக்கு முகவரி கொடுத்தது அர்ஜுன் சார்தான்.


555 படத்துல பரத்துக்கு எப்படிப் பழனி படிக்கட்டு மாதிரி கொண்டு வந்தீங்க?

பரத் எனக்குக் காலேஜ்ல இருந்தே பழக்கம். ரொம்ப நல்லவன். 555 படத்தின் இயக்குனர் சசிகுமார் 'பேக்ஸ் கொண்டுவா'னு எல்லாம் கேக்கலை. ஆனா, பரத், ''இதுவரை தமிழ் சினிமாவுல யாரும் கொண்டு வராத உடம்பு இந்தப் படத்துக்காக நான் கொண்டு வரனும்''னு பிடிவாதமா நின்னான். ''சரி, ஒண்ணும் பிரச்னையில்லை ஆறு மாசம் டைம் கொடு நீ நினைக்கிற மாதிரி மாத்தறேன்''னு சொன்னேன். ''ஆறு மாசம் முடியாது, சீக்கிரமே கொண்டு வரணும்''னு அடம் பிடிச்சான். ஆனா அவன் ஆசைப்பட்டபடி உடம்பை கொண்டு வர ஒரு வருஷம் பிடிச்சது.
நிறையப் பேர் பரத் உடம்பு ஸ்டீராய்டு போட்டு ஏத்தினதா சொல்றாங்க. அதுலாம் சுத்த பொய். அவன்பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். 'போதும் கிளம்பு'னு சொன்னாக் கூட, 'இல்லை இன்னும் கொஞ்ச நேரம்'னு வெறித்தனமா பயிற்சி செய்வான். பரத்தோட உடம்பை பார்த்துட்டு, அவனை இந்தியாவோட சிறந்த மாடலா தேர்வு செஞ்சு, மும்பைல விருது கொடுத்தாங்க. ஆனா, தமிழ்நாட்டுல இது யாருக்குமே தெரியாம போனது பெரிய வருத்தம். என்ன மாதிரி பாடி பில்டருக்கெல்லாம் 'மிஸ்டர் ஒலிம்பியா'னு ஒரு விருது தருவாங்க. அதுதான் எங்களுக்கான ஆஸ்கார் விருது.

அந்தப் போட்டியில் ஜெயிச்சவங்களுக்கு பரத்தைக் கூப்பிட்டு விருது கொடுக்கச் சொன்னாங்க. இதுவரை, இந்தியாவிலே ஹிருத்திக் ரோஷன், பரத் ரெண்டு பேருக்கு மட்டும்தான் அந்த மரியாதைக் கிடைச்சிருக்கு. அது மட்டுமில்லை. இந்தியாவுல நடக்கும் பல பாடி பில்டிங் போட்டியில் எங்களைத் தலைமை தாங்க கூப்பிட்டாங்க.

வேற யாருக்கெல்லாம் கோச் பண்ணீங்க?

'என்னை அறிந்தால்' படத்துக்காக அருண் விஜய்க்குப் பண்ணிருக்கேன். எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சது அஜீத் சார்தான். பரத் உடம்பைப் பார்த்துட்டு அந்தப் பையன் கிட்டேயே நீயும் ட்ரெயினிங் எடுத்துக்கோனு அருணை அனுப்பி வெச்சார் அஜீத் சார். அருண், தினமும் ஜிம்முக்கு இரவு 12 மணிக்குதான் வருவார். மூணு மணி நேரம் வியர்வை தெறிக்கப் பயிற்சி எடுப்பார். அப்பறம், சாயங்காலம் மூணு மணி நேரம் பயிற்சி. சோர்ந்தே போக மாட்டார். அவர் கூடப் பயிற்சி பண்றப்ப, செம ஜாலியா இருக்கும். சிக்ஸ் பேக் போடனும்னா நிச்சயம் டயட்ல இருக்கனும். சில நேரத்துல டயட் மீறிடுவார். நாங்க  அவரோட உடல்வாகை வெச்சு ஈசியா  கண்டுபிடிச்சுடுவோம். அதைப் பத்தி கேக்கும் போது அவர் சமாளிக்கிறதே செம காமெடி. ஆனா மனுஷன் வெறித்தனமான உழைப்பாளி. எப்பவும் 'பெருசா ஜெயிக்கணும் மாஸ்டர்' னு சொல்லிக்கிட்டே இருப்பார்.
அடுத்து ஒருநாள் அர்ஜுன் சார், அலுவலகத்துக்கு வர சொன்னார். அர்ஜுன் சார், 'இவன் பெயர் கவுதம். கார்த்திக் சார் பையன். மணிரத்னம் சார் படத்துல ஹீரோவா நடிக்கிறான். இவனை ட்ரெயின் பண்ண வேண்டியது உன் பொறுப்பு'னு ஒரு சின்னப் பையனை காட்டி சொன்னார். கவுதம் ரொம்ப ஜாலி டைப். ஜாலியா வொர்க் அவுட் பண்ணுவான். உங்களுக்குத் தெரியாத ஒரு சீக்ரெட் சொல்றேன். கடல் படத்துக்காகக் கவுதம் சிக்ஸ் பேக் முயற்சி பண்ணான்.

ஆனா அவனுக்குச் சிக்ஸ் பேக் வர்றதுக்குள்ள படத்தை முடிச்சுட்டாங்க. 'விடுங்க மாஸ்டர் அடுத்தப் படத்துல பார்த்துக்கலாம்'னு அவன் அதைப் பெருசாவே எடுத்துக்கலை. ஆனா, இவ்வளவு கஷ்டப்பட்டுக் கடைசில அவனுக்குப் பெரிய அங்கீகாரமும் கிடைக்காம போனது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அப்பாஸ், ஷாம்னு நிறையப் பேரை ட்ரெயின் பண்ணியிருக்கேன்.

அதுக்கப்புறம் பல அழைப்புகள், பாராட்டுகள். ஆனா, அதுல ஒரு போன் கால் மட்டும் என்னை வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க வெச்சது. ஏன்னா, போன்ல பேசினது அஜீத் சார். 'பரத் உடம்பை பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. கூடிய சீக்கிரம் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்'னு சொல்லியிருக்கார். அவர் கூட வேலைப் பார்க்க போற நாளுக்காக 'ஐ ம் வெயிட்டிங்'

சிக்ஸ் பேக் உடம்புக்கு நல்லதல்ல என்கிறார்களே அது உண்மையா?


சிக்ஸ் பேக் தப்பு, ரொம்பக் கஷ்டம் என்று பலரும் தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரில் தொடங்கி அர்ஜுன், அமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான்னு நிறையப் பேர் கொண்டு வந்திருக்காங்க. ஒருவேளை, இது கெடுதல் என்றால், அவங்க இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டாங்களே. சிக்ஸ் பேக் கொண்டு வர 70 சதவிகிதம் டயட் 30 சதவிகிதம் உழைப்புனு சரியான விகிதத்துல பேலன்ஸ் பண்ணனும். நம்ம எல்லாராலயும், சிக்ஸ் பேக் கொண்டு வர முடியும். ஆனா, சரியான உடற்பயிற்சி நிபுணரின் உதவி இல்லாம அது சாத்தியமில்லை. அர்ப்பணிப்பு உணர்வோட, கட்டுப்பாடும் இருந்தா ஈசியா கொண்டு வந்துடலாம். தயவு செஞ்சு சிக்ஸ் பேக் பற்றின போலியான தகவலை நம்பாதீங்க....No comments:

Post a Comment