மைலா லாவ்ரி நான்கு மாதங்களே ஆன இந்தப் பெண் குழந்தைக்காக 206 ஆண்டுகள் இங்கிலாந்தில் ஒரு குடும்பம் காத்திருந்தது. ஐந்து தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத குடும்பம் அது!
மார்க் லாவ்ரி, மைலாவின் தந்தை. ஹன்னா இவரின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதலில் மார்க்கைத் திருமணம் செய்யும்போது இவருடைய குடும்ப வரலாறைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறக்கவும் அந்தப் பெண் அதை காரணமாகக் காட்டி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டாராம். மார்க் மனம் நொந்திருந்த நேரத்தில் அறிமுகமான ஹன்னாவிடம் தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 'இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தபோதே என் குடும்பப் பின்னணியைச் சொல்லி நமக்கு பிறக்கும் குழந்தைகளில் பெண் பிள்ளையை எதிர்பார்க்காதே என்று சொல்லிவிட்டேன்' என்கிறார் மார்க்.
'இவரின் குடும்பத்தில் எங்கேயுமே பெண் வாடையே இல்லை. இவர்கள் குடும்பம் ஏதோ ஆண்களுக்கான விடுதி போலத்தான் இருக்கும். இவரைத் திருமணம் செய்த பிறகு முதல் முறையாகக் கருவுற்றபோது 6 மாதங்கள் ஆனவுடன் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆண் என்று தெரிந்தது. அதற்குப் பிறகாவது இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்தேன். கருமுட்டை வெளியாகும் (ளிஸ்uறீணீtவீஷீஸீ பீணீஹ்) நாளைக் கண்டறிந்து அந்த நாளிற்கு இரண்டு நாள் முன்பாக உறவு வைத்துக்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதே முறையை முயற்சித்து இரண்டாவது தடவையாக நான் கருவுற்றதும் ஸ்கேன் செய்த ரிசல்ட்டைப் பார்க்கவே பயந்தேன். ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் மார்க்கை கையிலேயே பிடிக்க முடியவில்லை. குழந்தை பிறக்கும்வரை என்னை ஒரு குழந்தையாகவே லாவ்ரி குடும்பத்தினர் பார்த்துக்கொண்டனர்' என்கிறார் ஹன்னா.
குழந்தை பிறந்து 4 மாதங்கள்வரை வெளியே காட்டாமலிருப்பது இங்கிலாந்து மரபு. அது ஜனவரியுடன் முடிந்ததால், வெளியுலகுக்குத் தெரிவித்துள்ளனர் லாவ்ரி குடும்பத்தினர்.
எங்க நாட்டிலே இது தலைகீழ்!
No comments:
Post a Comment