சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Feb 2015

”தேங்க்ஸ் விக்டர்!”

'தடையறத் தாக்க’ படத்தில் கோட்டுக்கு அந்தப் பக்கம் ஹீரோவாக அசத்திய அருண் விஜய், 'என்னை அறிந்தால்...’ படத்தின் மூலம் இந்தப் பக்கம் வில்லனாகவும் உதார் பண்ணிவிட்டார்.
 ''இந்த நிமிஷம் இந்த உலகத்துலயே சந்தோஷமான ஆள் நான்தான். 1995-ல் சினிமாவில் அறிமுகமாகி 20 வருஷங்களா போராடினதுக்குக் கிடைச்ச பலன்தான் 'என்னை அறிந்தால்...’ வெற்றி. நடுவுல 'பாண்டவர் பூமி’, 'தடையறத் தாக்க’னு ரொம்ப அரிதா 'வெரி குட்’ வாங்கிட்டு இருந்தேன். இப்போ எங்கே போனாலும் 'விக்டர்... விக்டர்...’னு கொண்டாடுறாங்க.
என் முதல் படம் 'முறைமாப்பிள்ளை’னு ரெக்கார்டுல இருக்கு. அதுக்கும் முன்னாடி 'லவ் ஸ்டோரி’னு ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக். மூணு பாடல்கள்கூட போட்டுக் கொடுத்தார். ஆனா, படம் ஷூட்டிங்கே போகலை. முதல் படமே அடி. அப்புறம் ஏதாவது பண்ணிடலாம்னு ஒவ்வொரு படத்திலும் முயற்சி பண்ணிட்டே இருந்தேன். படங்கள் சரியாப் போகலை. எவ்வளவு யோசிச்சாலும் காரணமே தெரியலை. ரொம்பப் போராட்டத்துக்குப் பிறகு ஒரு படம் ஜெயிக்க என்ன பண்ணணும், அதோட அலைவரிசை என்னன்னு தெளிவு வந்து சொந்தமா எடுத்ததுதான் 'மலை மலை’. அது கமர்ஷியல் ஹிட். அப்புறம் மகிழ் திருமேனி மூலமா 'தடையறத் தாக்க’ படத்தில் நல்ல வெளிச்சம் கிடைச்சது. சினிமாவில் இதுதான் பண்ணணும்னு தெரிஞ்சுக்கவே எனக்கு இவ்வளவு படங்கள் பண்ணவேண்டியதா இருந்தது. சரி... விழுந்துதானே எந்திரிக்க முடியும்.''
''நீங்களே சொன்ன மாதிரி அத்தனை வருஷங்களுக்குப் பிறகு 'தடையறத் தாக்க’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவா நல்ல அடையாளம் கிடைச்சது. ஆனா, அடுத்து உடனே வில்லன் கேரக்டர் பண்ண எப்படிச் சம்மதிச்சீங்க?''
''கௌதம் சார் கதை சொன்னப்ப, விக்டர் கேரக்டர் அந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்துச்சு. இன்னொரு நல்ல விஷயம் அஜித் சார். அவரை மாதிரி ஒரு மாஸ் ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கும்போதுதான், ஒரு நடிகன் தன் பெஸ்ட்டைக் கொண்டுவர முடியும். சொல்லப்போனா, என்னை முதன்முதலா வில்லனா நடிக்கச் சொன்னதே அவர்தான். ஆறு வருஷங்களுக்கு முன்னாடி ஏதோ ஒரு விழாவில் அவரை எதேச்சையா சந்திச்சப்ப, 'நீ வில்லனா நடியேன். 'வாலி’யில் ஒரு நெகட்டிவ் ரோல் பண்ணப்போதான் என் திறமை முழுசா வெளியே வந்தது. நீயும் முயற்சி பண்ணு. கண்டிப்பா வொர்க்-அவுட் ஆகும்’னு சொன்னார். ஆனா, அவர் படத்தில் அவருக்கே வில்லனா நடிப்பேன்னு எதிர்பார்க்கலை!''
''தொடர் தோல்விகளுக்கு நடுவுல உங்க காத்திருப்புக்கு அடிப்படை நம்பிக்கையா எது இருந்தது?''
''எல்லாருமே, 'என்ன அருண்... உனக்கு நடிப்பு, டான்ஸ்னு எல்லாமே நல்லா வருது. ஆனா, ஏன் படங்கள் சரியா அமையல?’னு விசாரிச்சுட்டே இருந்தது, ஒருகட்டத்துக்கு மேல என் மேலயே எனக்கு ஆத்திரத்தை உண்டாக்குச்சு. அந்தக் கோபத்தை, 'அடுத்த படத்துல இன்னும் நல்லா பண்ணணும்’கிற வெறியா மாத்திக்கிட்டேன். இன்னும் நிறைய உழைக்கிறது, கோபம் தீர்றவரை வொர்க்-அவுட் பண்றதுனு என்னைப் பரபரப்பாவே வெச்சுட்டு இருந்தேன். எனக்காக இல்லைன்னாலும் என் வீட்ல இருக்கிறவங்களுக்காகவாவது ஜெயிச்சே ஆகணும். ஏன்னா, என்னைப் பத்தி அவங்ககிட்டதான் அந்தக் கேள்வியை நிறையப் பேர் கேட்பாங்க. 'முடியலை’னு கையைத் தூக்கிட்டா இவ்வளவு நாள் உழைச்சது வீணாப் போயிடும். அதனாலயே ஓடிட்டே இருந்தேன். 'என்னை அறிந்தால்...’ படத்துல ஒரு வசனம் வரும். 'இவ்ளோ நாள் நீ ஓடிட்டு இருக்கேன்னா, இதுதான் உனக்கான டைம். போட்டுத் தாக்கு’னு. அப்படி இது எனக்கான டைம்!''
''குடும்பம் பத்திச் சொல்லுங்க?''
''மனைவி ஆர்த்திக்கு சினிமா நல்லா தெரியும். நல்ல ரசிகை. பூர்வி, ஆர்ணவ்னு ரெண்டு குழந்தைங்க. அவங்க பிறந்த பின்னாடிதான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். 'மலை மலை’ பட வெற்றியா இருக்கட்டும், 'தடையறத் தாக்க’ படத்தில் கிடைச்ச பேரா இருக்கட்டும். எல்லா நல்லதும் இவங்க வந்த பின்னாடிதான் கிடைச்சது. பூர்விக்கு அஞ்சு வயசு. அமைதியான பொண்ணு. ஆர்ணவ் எல்.கே.ஜி படிக்கிறார். 'என்னடா படிக்கிற?’னு கேட்டா, ஸ்கூல் பேர் ஆரம்பிச்சு தனக்கு அஞ்சு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்ங்கிற உண்மை வரைக்கும் சொல்வார். வீட்ல இருக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னா, இவங்கதான் காரணம்!''

No comments:

Post a Comment