சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Feb 2015

மீண்டும் நடுங்க வைக்கப் போகும் நூறாவது நாள்

ணிவண்ணன் இயக்கத்தில் 1984 ம் ஆண்டு விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி போன்ற திறமையான நடிகர்களின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நூறாவது நாள்’.

சீரியல் கில்லர் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், த்ரில்லர் படங்களின் வரிசையில் இன்றும் முதலிடத்தை கொடுக்கும் அளவுக்கு, ரசிகர்களை உருட்டி மிரட்டிய திரைப்படம். படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவரும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருப்பார் மணிவண்ணன்.

இத்திரைப்படத்தினை தற்போது மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன், மாடர்ன் வெர்ஷனில் ரீமேக் செய்ய உள்ளார். மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார்.
‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் மெயின் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்திற்கு இசை நீரோ பிரபா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் குழு விலி ருந்து வந்தவர் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்றார் போல் படத்தின் கேரக்டர்களில் சில மாற்றங்கள் செய்து, முந்தைய படத்தினை விட அதிக பரபரப்பான காட்சியமைப்புகளுடன் படத்தை உருவாக்க இருக்கிறார் ரகு. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இப்போதே ஒரு திகில் அனுபவத்திற்கு தயாராகிவிடலாம்.!No comments:

Post a Comment