சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Feb 2015

ஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வார சாதனை!

இந்தி நடிகர் ஷாருக்கான் - கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே'  படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்து, தனது திரையிடலை  இன்றுடன் முடித்துக் கொண்டது.
 

நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலம் பெற்றது. மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடி உள்ளது.

இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

வழக்கமான புதிய படங்கள் 3 காட்சிகள் ஓட வேண்டி இருப்பதால் தியேட்டர் நிர்வாகமும், யாஷ் சோப்ரா பிலிம் நிறுவனமும் இணைந்து ஆலோசித்து, இப்படத்தை தியேட்டரில் இருந்து எடுக்க முடிவு செய்தது. அதிகமான பேர் வந்து பார்ப்பதால் தியேட்டர் நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்தாலும், ஊழியர்கள் அதிகாலை முதல் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது.
அதனால் இந்த படத்தின் சாதனையை இத்துடன் நிறுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று காலை 9.15 காட்சியுடன் இந்த படத்தின் சாதனை நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று இந்த படத்தை 210 பேர் பார்த்துள்ளனர். இந்திய சினிமாவில் 1009 வாரங்கள் ஓடி சாதனை செய்த ஒரே படம் இதுதான்.
இதற்கு முன் மும்பை மினர்வா தியேட்டரில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஸத்கான் நடித்த ’ஷோலே’ படம் 5 வருடங்கள் ஓடியது.

படத்தின் கதை,  லண்டனில்  வாழும்  ஷாருகானும், கஜோலும் ஒரு சுற்றுலா பயணத்தின் போது ரயில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறுகிறது. கஜோலுக்கு நிச்சயம் ஆகி விட்டதால் அவரால் காதலை சொல்ல முடியவில்லை.

கஜோலின் தந்தை இந்தியாவில் இருக்கும் அவர்  நண்பனின் பஞ்சாபி இளைஞரை நிச்சயித்து விடுகிறார். ஷாருகான் மாப்பிள்ளை வீட்டிற்கே சென்று கஜோலை எவ்வாறு கைபிடிக்கிறார் என்பதே மீதி கதை.

இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம். இந்த படம் பத்துக்கும் மேற்பட்ட பிலிம் பேர் விருதுகளை பெற்று உள்ளது. அது மட்டுமல்ல சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றது.


No comments:

Post a Comment