சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

புதுப்பேட்டை பார்ட் 2 வருமா? அஜித் பற்றி உங்கள் கருத்து? - ரசிகர்கள் கேள்விகளுக்கு தனுஷ் சுவாரஸ்ய பதில்கள்!

இன்று உலகம் முழுவதும் ’அனேகன்’ ரிலீஸ். இந்நிலையில் தனுஷ் நேற்று இரவு ட்விட்டரில் ரசிகர்கL கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் , ரசிகர்கள் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் தனுஷின் பதில்களும்.

புதுப்பேட்டை பார்ட் 2 எப்போது துவக்குவீர்கள்?
இப்பவும் அதபத்தி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முடிவாகவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் சித்தரிப்பது மிகவும் கடினம்.
நான் நினைக்கிறேன் அடுத்து இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் , ரஜினி, அமிதாப்புக்கு
பிறகு , நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
உங்கள் அன்பு மிகவும் கண்மூடித்தனமாக இருக்கிறது. எனினும் இந்த அன்புக்கும், ஆதரவிற்கும் எனது நன்றி.
’ஷமிதாப்’ படத்தில் நீங்களும் அமிதாப்பும் ஒரே சீன்களில் வரும் போது இருவரும் ஒரே மாதிரி நடிப்பில் 
அசத்தியிருக்கிறீர்கள்?
அவருடன் நடித்ததில் மிகவும் பெருமைப் படுகிறேன், கண்டிப்பாக உங்களுக்கு பிடித்தது எனக்கு
மகிழ்ச்சி.
விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா?
நான் இயக்குநராக தகுதி பெரும் தருவாயில் கண்டிப்பாக அவரிடம் கேட்பேன் , அவர் ஒப்புக் கொண்டால் படம் இயக்குவேன்.
’அனேகன்’ படத்தின் கதை விஜய்க்காக சொல்லப்பட்டதா?
எனது பெயரை பரிந்துரை செய்ததே விஜய் தான். இந்த கதாப்பத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன்
என அவர் நினைத்திருக்கிறார்
தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
பவன் கல்யாண் சார்..
சிம்புவை வைத்துதானே ‘ஆப்பொனண்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன் என வரிகள் 
வைத்தீர்கள்?
கண்டிப்பாக இல்லை. நானும் சரி, கே.வி.ஆனந்த் சாரும் சரி யாரையும் தனிப்பட்ட முறையில்
எடுத்துக் கூறும் வகையில் சினிமாவைப் பயன்படுத்த மாட்டோம். படத்தின் கதைக்குரிய வரிகள் அவை. 
’என்னை அறிந்தால்’ இன்னும் நீங்கள் பார்க்கவில்லையா? அஜித் குறித்து உங்கள் பதில்?
’ஷமிதாப்’ படத்தின் ப்ரமோஷன்களின் மும்முரமாக இருந்தேன். அதனால் என்னால் பார்க்க முடியவில்லை.
எனினும் பலரும் அஜித் பக்கா ஸ்டைலாக நடித்திருப்பதாக கேள்விபட்டேன். அஜித் ஒரு நடிகராகவும்,
மனிதராகவும் எனக்கும் மிகவும் பிடிக்கும். நல்ல மனிதர்.
மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பீர்களா?
ஸ்க்ரிப்ட் ஒத்துவந்தால் கண்டிப்பாக , சிவகார்த்திகேயன், சிம்பு, மற்றும் நல்ல நடிகர்
விஜய் சேதுபதி போன்றோருடன் இணைந்து நடிப்பேன்.
’அனேகன்’ படம் எப்படி? அனேகன் யார்?
’அனேகன்’ கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும். என்ஜாய்.. அனேகன் பல நிழல்கள் கொண்ட ஒரே ஆத்மா.
புதிய கதை, லோகேஷன்கள், சண்டைகாட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள் , காதல் என அனேகன்
2.30 மணி நேரம் உங்களை மகிழ்விக்கும்
நண்பர்களே என்னால் முடிந்த அளவு பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். இது எனக்கு நல்ல தருணம், உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. மேலும் காடவுள் உங்களுடன் இருப்பார் என தனது டவிட்டர் ரசிகர்களிடம் விடை பெற்றார் தனுஷ்.No comments:

Post a Comment