சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Feb 2015

அந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி!

''இந்தப் படத்துக்காக 25 டைட்டில் யோசிச்சுவெச்சிருந்தோம். அதுல எதை வெச்சுக்கலாம் 'அதுவா... இதுவா?’னு நைட்டு பத்து மணிக்கு உட்கார்ந்தோம். பேசிப் பேசி 'எலி’னு ஃபிக்ஸ் பண்ணப்ப, அதிகாலை 3 மணி. நல்லவன் கூட்டத்துல இருக்கிற கெட்டவனை 'கறுப்பு ஆடு’னு சொல்வாங்க. அதுவே கெட்டவன் கும்பல்ல இருக்கிற நல்லவனை எப்படிச் சொல்வாங்க? 'உள்ளுக்குள்ள எங்கேயோ ஒரு எலி உருட்டிட்டு இருக்கு. அதைப் பொறி வெச்சுப் புடிங்கடா’னுதானே? அப்படி ஒரு நல்ல எலிதான் நம்ம வடிவேலு சார். பிள்ளையாருக்கு உதவுற வாகனம், 'டாம் அண்ட் ஜெர்ரி’யில சேட்டை பண்ற செல்லம்னு எலி கேரக்டர் எப்பவுமே மக்களுக்கு ஸ்பெஷல்தான்'' - இரண்டே எழுத்தில் தலைப்புப் பிடித்த கதையை உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். வடிவேலுவின் 'ரீஎன்ட்ரி’ ஆன 'தெனாலிராமன்’ படத்தை இயக்கியவர், வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸிலும் தொடர்கிறார்.


''அது என்னங்க... உங்களுக்கும் வடிவேலுவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி?''
''எல்லாம் தானா அமையுது. 'தெனாலிராமன்’ ஷூட்டிங் முடிச்சவுடனே, 'தம்பி, அடுத்த படத்துக்குக் கதை ரெடி பண்ணிடுப்பா’னு சொன்னார் வடிவேலு சார். அப்புறம் ரெண்டு பேரும் வேற எதுவுமே பேசிக்கலை. கதையை ரெடி பண்ணிட்டுப் போய் சொன்னேன். அவருக்கும் பிடிக்கவும், உடனே தடதடனு ஷூட்டிங் போயிட்டோம். வடிவேலு சார் திருடனா, போலீஸா பண்ணின சேட்டைகளைப் பார்த்திருக்கோம். ஆனா, ஓர் உளவாளியா அவர் என்ன பண்ணுவார்னு த்ரில்லிங் காமெடியா 'எலி’ படத்துல சொல்லியிருக்கோம். எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் மாதிரி இவரும் ஒரு கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடிக்க உளவாளியா உள்ளே நுழையுறார். அங்கே அவர் படுற அவஸ்தைகளும், சைடு கேப்ல பண்ற சாகசங்களும்தான் கதை!''
''உளவாளின்னா ஜேம்ஸ் பாண்ட் மாதிரி எக்கச்சக்க காதலிகளோட ரொமான்ஸ், டூயட் எல்லாம் பாடுவாரா?''
''ஏங்க இப்படிக் கொளுத்திப்போடுறீங்க? படத்துல அவருக்கு ஒரே ஒரு ஹீரோயின்தான். அவரைத்தான் காதலிப்பார். அந்தக் காதல்லயும் காமெடிதான்  தெறிக்கும். முன்னாடியே அசின், நயன்தாராவை எல்லாம் ஜாலியா காதலிச்சிருப்பார்ல. அதே மாதிரி இந்தப் படத்துலயும் ஜாலியான காதல் அத்தியாயங்களைப் பார்க்கலாம். படத்தில் கொஞ்சமா ரொமான்ஸும் இருக்கு. 'உங்களை டீல் பண்றது ரொம்ப டிஃபிக்கல்ட்டால இருக்கு’னு இங்கிலீஷ், தமிழ்னு கலந்துகட்டி கலகலனு பன்ச் டயலாக் பேசி அசத்தியிருக்கார். ரொம்ப நாளைக்குப் பிறகு வடிவேல் சாரை இந்தப் படத்தில் முழு ஃபோர்ஸோட பார்ப்பீங்க. தயாரிப்பாளர் சதீஷ்குமார் இந்தப் படத்தை சீக்கிரமே ரிலீஸ் பண்ண ரொம்ப ஆர்வமா இருக்கார்!''
''வடிவேலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த 'தெனாலி ராமன்’ பட ரிசல்ட், நீங்க எதிர்பார்த்த அளவுக்கு இருந்துச்சா?''

''வடிவேலு சார் ஏற்கெனவே 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துலயே வரலாற்று சப்ஜெக்ட் பண்ணிட்டார். அவர் நடிச்ச முதல் வரலாற்றுப் படம் என்பதால், அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் வேற லெவல்ல இருந்துச்சு. ஆனா 'தெனாலிராமன்’, வடிவேல் சார் நடிச்ச மூணாவது வரலாற்றுப் படம். அதனால எதிர்பார்ப்பு லெவல் கொஞ்சம் குறைஞ்சிருக்கலாமே தவிர, படம் பார்த்த எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. எங்களுக்கும் சந்தோஷம்தான்.''


No comments:

Post a Comment