அவசர போலீஸ் என்பதற்கு அர்த்தம் தெறிக்க உழைத்திருக்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் போலீஸார்.
ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகத்தை ஒட்டிய சாலைப் பகுதி செம டேஞ்சரான ஏரியா. காரணம் - சாலையை ஒட்டிய சிறு இறக்கத்தில் ஆழ்கடல் ஆரம்பித்து விடுகிறது. எனவே, ‘கார், பைக்கில் வருபவர்கள் எப்போதுமே அலெர்ட்டாக இருக்க வேண்டும்’ என்கிற எச்சரிக்கைப் பலகையையும் தாண்டி கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்தி விட்டார், 63 வயதான அந்தப் பெண்மணி.
கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் சொல்ல, தடாலென காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் என்னும் போலீஸ் அதிகாரிகள்.
‘‘இது மிகவும் ஆழமான பகுதி. எனவே, காரின் முன் பகுதி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. நாங்கள் அந்தப் பெண்ணைப் பதற்றப்படாமல் காரின் பின்பகுதிக்கு வந்து, விண்ட் ஷீல்டின் இடது ஓரத்தில் பம்மிக் கொள்ளச் சொன்னோம். க்ரேன் எடுத்து வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதெல்லாம் சாத்தியமில்லாத காரியம். ஏனென்றால், எங்களுக்குக் குறைந்த பட்ச நேரமே இருந்தது. சைமன் முன் பக்கம் இறங்கி, முடிந்த அளவு காரைப் பின் தள்ள முயற்சித்தார். ஆனால், அவருக்கு தண்ணீருக்குள் மூச்சு முட்ட ஆரம்பித்துவிட்டது. இது முட்டாள்தனமான காரியம் என்பதை உணர்ந்தோம். பின்பு வேறு வழியில்லாமல், பிஎம்டபிள்யூவின் விண்ட்ஷீல்டை உடைத்து அந்தப் பெண்ணை மேலே தூக்கினோம். இவையெல்லாமே வெறும் 40 விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது!’’ என்று வெற்றிப் பெருமூச்சோடு சொல்கிறார் பால்வாட்ஸ்.

பின்னர், க்ரேன் வரவழைத்து காரை மேலே தூக்கிய பிறகு, ‘‘ஆளையும் காப்பாற்றிவிட்டீர்கள்; காரையும் காப்பாற்றி விட்டீர்கள்!’’ என்று கமிஷனர் மற்றும் ஒட்டுமொத்த காவல்துறையுமே சைமன்ஸ் மற்றும் பால்வாட்ஸுக்கு போனில் பாராட்டு மழை பொழிந்து விட்டார்களாம்.
‘‘மயிரிழையில் உயிர் தப்பினார் என்று சொல்வார்களே.... அதை நான் நேரடியாக இன்றுதான் உணர்ந்தேன். காருக்குள் இருந்தபோது, என் கதை அவ்வளவுதான் என்று நினைத்தேன். கடைசி நிமிடத்தில் என்னைக் காப்பாற்றிய அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்!’’ என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி சொன்னார் பிஎம்டபிள்யூவின் உரிமையாளரான அந்தப் பெண்மணி.

No comments:
Post a Comment