சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Feb 2015

மோசடி வழக்கில் பத்திரிகை அதிபர் கைது!


ஐ.பி.எல் அணியான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை உருவாக்கிய டெக்கான் கிரானிக்கிள் குழுமத்தின் தலைவர் வெங்கட்ராம் ரெட்டி வங்கி மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்டார்.




கடந்த 2008ஆம் ஆண்டு  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்ட போது, உருவான டெக்கான்சார்ஜர்ஸ் அணியின் தலைவராக இருந்தவர் வெங்கட்ராம ரெட்டி. இவர் பிரபல ஆங்கில பத்திரிகையான டெக்கான் கிரானிக்கலின் தலைவரும் கூட. கடந்த2012 ஆம் ஆண்டு  டெக்கான் கிரானிக்கல் குழுமத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து  வீரர்களுக்கு சம்பளத் தொகை பாக்கி வைக்கப்பட்டது. இதுபோன்ற தொடர்ந்த சர்ச்சைகளால் ஐ.பி.எல். தொடரில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டது.

இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை டெக்கான் கிரானிக்கல் குழுமம் நாடியது. உத்தரவாதத் தொகையாக 100 கோடி ரூபாயை கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கட்டத் தவறியதால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்தது. அதற்கு பின் ஹைதராபாத் சார்ஜர்ஸ் அணியை சன் குழுமம் வாங்கி அதற்கு சன்ரைசர்ஸ் ஹைராபாத் என்று பெயரிட்டது.

இந் நிலையில் டெக்கான் கிரானிக்கல் குழுமத்திற்கு சொந்தமான வரவு, செலவு நிதி அறிக்கையில் முறைகேடு செய்து வங்கியில் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக வெங்கட்ராம் ரெட்டி மீது புகார் எழுந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று செகதராபாத்தில்  டெக்கான் கிரானிக்கல் குழுமத்தின் தலைவர் வெங்கட்ராம் ரெட்டி, நிர்வாக மேலாளர் விநாயக் ரவி ரெட்டி, துணைத் தலைவர் பி.கே. ஐயர் ஆகியோரை கைது செய்தனர்.

போலி அறிக்கைகளை தயாரித்து கடந்த 4 ஆண்டுகளில் கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 1,230 கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாகவும், அதற்கேற்ற வகையில் டெக்கான் கிரானிக்கிள் குழுமத்தின் நிதி நிலைமை இல்லை என்றும் கூறப்படுகிறது. ஹைதரபாத் சார்ஜர்ஸ் அணி கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment